அடுத்து வரவிருக்கும் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்..
மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த புதிய வெளியீடான மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ன அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்பதை இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

லெனோவோ நிறுவனத்தின் பிராண்டான மோட்டோரோலா வடிவமைப்பின் கீழ் கெய்வ் எனும் குறியீட்டு பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி சீரிஸ் மாடலாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 5ஜி சேவையுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய வெளியாகியுள்ள சில சுவாரசியமான தகவல்களை இப்பொழுது பார்க்கலாம். புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.6' இன்ச் OLED டிஸ்பிளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் உடன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்துடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இந்த போனின் கேமரா அம்சத்தை பொறுத்த வரை, 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி சென்சார், 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட மற்றொரு சென்சார் ஆகியவை வழங்கப்படும் என்றும், போனின் முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் செல்பி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போது மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போனின் விலை விபரங்கள் மற்றும் இதர அம்சங்களின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அடுத்து வரும் வாரங்களில் இவற்றின் தகவல்கள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோ ஜி 5ஜி மாடல் XT2 113-2 மற்றும் XT2 113-3 எனும் மாடல் நம்பர்களுடன் இரண்டு வேரியண்ட்களில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications