Home
Mobile

48 எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான Moto E7.!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அட்டகாசமான கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-

மோட்டோ இ 7 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்தீர்மானம் மறறும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 இ 7 ஸ்மார்ட்போனில்

மேலும் இந்த மோட்டோ இ 7 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும். பின்புகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 48

மோட்டோ இ 7 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 தகவலின் படி இந்த ஸ்மார்ட்போனில்

வெளிவந்த தகவலின் படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெறும் என எதர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 4000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ இ 7 சாதனத்தில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத்,

இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Moto E7 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X