Home
Mobile

விரைவில் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் மோட்டோ இ20 ஸ்மார்ட்போன்.!

விரைவில் மோட்டோ இ20 ஸமார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவலை வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதேபோல் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ இ20 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ இ20 ஸ்மார்ட்போ

வெளிவந்த தகவலின்படி மோட்டோ இ20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ இ20சாதனம்.

 இ20 ஸ்மார்ட்போனில் தரமான

மோட்டோ இ20 ஸ்மார்ட்போனில் தரமான 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராஸசர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மோட்டோ இ20 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ20 ஸ்மார்ட்போனின் பின்புறம்

இந்த மோட்டோ இ20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி secondary என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான மோட்டோ இ20 ஸ்மார்ட்போன்.

 இ20 ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம்

மோட்டோ இ20 ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

மார்ட்போனில் 4000 எம்ஏஎச்

மோட்டோ இ20 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளவரும்.

 என்எப்சி மற்றும்

அதேபோல் 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் மாடல் எண் XT215-1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மோட்டோ இ20 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.அண்மையில் சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Moto E20 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X