6.81-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த சியோமி மி 11 ஸ்மார்ட்போன் ஆனது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில் சியோமி மி 11 ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட சியோமி மி 11 சாதனத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

வெளிவந்த தகவலின்படி சியோமி மி 11 ப்ரோ மாடல் ஆனது 6.81-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் எனவும், சிப்செட் மட்டும் மாறுபடும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது சியோமி மி 11 ஸ்மார்ட்போனின் அனைத்து சிறப்பம்சங்களையும் இப்போது பார்ப்போம்.
சியோமி மி 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச் 2கே WQHD AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,440x3,200 பிக்சல் தீர்மானம், 1500 nits பிரைட்நஸ் வசதி, 120Hz refresh rate உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 10( MIUI 12.5 ) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
சியோமி மி 11 ஸ்மார்ட்போன் HDR10+ ஆதரவு, Motion Estimation, Motion Compensation மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மி 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார்+ 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் + 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20 எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு இவற்றுள் அடக்கம்.
சியோமி மி 11 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் மி டர்போசார்ஜ் 55W wired மற்றும் 50W wireless வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஹாரிசன் ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் மிட்நைட் கிரே போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications