Home
Mobile

ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 லைட்.!

சியோமி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த மி 11 ஸ்மார்ட்போன் ஆனது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மி 11 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விரைவில் சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம்.

ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 லைட்.!

வெளிவந்த தகவலின்படி மி 11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் மி 11 லைட் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 லைட்.!

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக சியோமி நிறுவனம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 லைட்.!

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ்,க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 விலையில் வெளிவரும் என ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது.

Picture Credits: The Pixel

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Mi 11 Lite Smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X