தரமான டிஸ்பிளே வசதியுடன் களமிறங்கும் ஐபோன் 13.! முழு விவரங்கள்.!

|

ஐபோன் 13 மாடல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பா ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முறையும் மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்யும் போது தனித்துவமான அம்சங்களையும் கொண்டுவருகிறது. அதன்படி இந்த ஐபோன் 13 மாடலில் தனித்துவமான அம்சங்கள் இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டு ஸ்மார்ட்போன்களில்

இப்போது பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் OLED தொழில்நுட்ப வசதி இடம்பெறுகிறது. எனவே விரைவில் வெளியாகும் புதிய ஐபோன் மாடல்களில் இதே தொழில்நுட்ப வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிது.

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம்

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம்

அதன்படி ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம் பெறும் முதல் மாடல் ஐபோன் 13 என்றும், இது கடிகாரம், பேட்டரி மற்றும் இதர நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் 13 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

பிஎஸ்என்எல் புது ரீசார்ஜ் திட்ட சலுகைகள்: விலை மற்றும் சலுகை விவரங்கள்!பிஎஸ்என்எல் புது ரீசார்ஜ் திட்ட சலுகைகள்: விலை மற்றும் சலுகை விவரங்கள்!

LTPO OLED பேனல்

LTPO OLED பேனல்

புதிய ஐபோன் சீரிசிற்கு ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கின் LTPO OLED பேனல்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது ஐபோன் சாதனங்களின் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்தை வழங்கி ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே அம்சத்தையும் செயல்படுத்த வழி வகுக்கும்.

டாப் டக்கர் ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட்டில் ரூ.15,000 கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!டாப் டக்கர் ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட்டில் ரூ.15,000 கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

உறுதியான மேக்சேப் மேக்னட்கள்

உறுதியான மேக்சேப் மேக்னட்கள்

இதுதவிர புதிய ஐபோன் 13 மாடல்களின் உறுதியான மேக்சேப் மேக்னட்கள் வழங்கப்படும் என்றும் நட்சத்திரங்களை பார்த்ததும் ஆஸ்ட்ரோ மோட் வசதியை தானாக ஆன் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய நாட்ச் மற்றும் ஷிப்ட் OIS வழங்கப்படும்

மேலும் ஐபோன் 13 சீரிஸ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, போர்ட்ரெயிட் மோட் வீடியோவிலும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் 13 மாடல்களில் அல்ட்ரா வைடு கேமராக்கள், சிறிய நாட்ச் மற்றும் ஷிப்ட் OIS வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும்

முன்னதாக வெளிவந்த தகவலின்படி, ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த 4 மாடல்களின் பெயர்களை பொறுத்தவரை, ஐபோனி 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.

அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா

அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா

புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் சிறப்பான அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராக்களுடன் மிரட்டலான வடிவமைப்புடன் புதிய வண்ணங்களுடனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனம் ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அதன் புதிய சாதனத்துடன் அறிமுகம் செய்யும், அப்படி இந்த ஆண்டு என்ன புதிய தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

குறிப்பாக இந்த கசிவுகள் (ஆன்லைனில் வெளியான தகவல்) அனைத்தும் மிகவும் ஆரம்ப கால லீக்ஸ் தகவல்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming iPhone 13 smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X