ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
அண்மையில் பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 19-ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும்
என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,640 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

வைஃபை, 4 ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.6,500-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications