விரைவில் அறிமுகமாகும் ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன்.!
சில மாதங்களுக்கு முன்பு ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹானர் எக்ஸ்20 5ஜி சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. பின்பு 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக ஹானர் எக்ஸ்20 5ஜி மாடல் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியுடன் வெளிவரும். பின்பு 64எம்பி ரியர் கேமரா வசதி இந்த புதிய ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் TFT எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Magic UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போனல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஹானர் எக்ஸ்20 எஸ்இ சாதனத்தின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல். வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications