விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.!
கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதாவது பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் இருக்கும் அல்ட்ரா வைடு ஆங்கில் கேமராவில் 0.7எக்ஸ் மற்றும் 1.0 எக்ஸ் அளவில் ஜூம் லெவல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோக்களை நொடிக்கு60 பிரேம் வேகத்தில் பதிவு செய்யும் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதுவிர பேபி மோட், நிமா ஏஸ்தடிக், மோஷன் பிளர், மேஜிக் இரேசர், பேஸ் டி-பிளர், மேனுவல் வைட் பேலண்ஸ், போர்டிரெயிட் ஸ்பாட்லைட், சீன் லாக் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த
பிக்சல் 6 ப்ரோ மாடல் ஆனது ப்ளூடூத் மைக்ரோபோன் வசதியை கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்தஸ்மார்ட்போன் 12எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது 6.4-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 5ஜி ஆதரவு கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் மாடல். கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இந்த பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்பிளே வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ஆனால் விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 4680 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி 3.1 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்.

மேலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications