அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன்.!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் ஷார்க் 4 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான சிப்செட் மற்றும் கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக கேமிங் வசதிக்கு என்றே உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
இந்நிலையில் பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். வெளிவந்த தகவலின்படி பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 144Hz refresh rate, 1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி
இந்த பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேமிங் மற்றும் ஆப் போன்றவற்றை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அசத்தலான சிப்செட் வசதி. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி,பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் 108எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிளாக் ஷார்க் 4 சாதனத்தில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் 18ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிளாக் ஷார்க் 4 சாதனத்தில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

4500எம்ஏஎச் பேட்டரி
பிளாக் ஷார்க் 4 ப்ரோ மற்றும் பிளாக் ஷார்க் 4 சாதனங்களில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு 120 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் இந்த இரண்டு அசத்தலான ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஜி எல்டிஇ, வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ், 5.1 ஜிகாஹெர்ட்ஸ், 5.8 ஜிகாஹெர்ட்ஸ், புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுபிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications