Home
Mobile

தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்: முழுவிவரம்.!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதி என பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும், அதற்கு தகுந்த அம்சங்களுடன் வெளிவருகிறது. மேலும் ஐபோன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனகள் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும்.

தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்: முழுவிவரம்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 14-ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனம் தனது அட்டகாசமான ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் OnePlus World மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் அறிமுகம் செய்யப்படும். இதன் அறிமுகத்திற்கு virtual reality (VR)என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், இது அறிமுகத்திற்கான சிறந்த அனுபவத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. இந்த புதுமையான அறிமுகத்தின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு சிறப்பு அழைப்பிதழ்களை வடிவமைத்துள்ளது, விரைவில் இது ஒன்பிளஸ் ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8டி வெளியீட்டுக்கு virtual auditorium (OnePlus World) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து ஒன்பிளஸ் 8டி அறிமுகத்தைப் பார்க்க முடியும், அதேசமயம் ஸ்ட்ரீமிங் போது கருத்துகளைக் கூட பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக இந்த சாதனத்தின் அறிமுகம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த அறிமுக நிகழ்வு அக்டோபர் 14-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் கூட நடைபெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

முன்பதிவு ஆரம்பம்
இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சில மோட்டார் ஸ்டோர்களில் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது. விரைவில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் வலைதளங்கள் வழியாகவும் முன்பதிவு செய்ய முடியும். ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளம் மூலம் வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

என்னென்ன அம்சங்களுடன் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் வெளிவரும்
வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனை விட சிறந்த வடிவமைப்புடன் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு வசதி, 6.5-இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 120Hz refresh rate அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஒன்பிளஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் ஆட்டோ எச்டிஆர் மற்றும் இஐஎஸ் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் இதயம் என்னவென்றால் அது சிப்செட் தான். அதன்படி ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதாவது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் சிப்செட் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் குவால்காம் பிராசஸர் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் போன்ற வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும்.

அதேபோல் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும், அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். பின்பு இந்த சாதனத்தில் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே 50சதவிகிதம் சார்ஜை வெறும் 15நிமிடங்களில் நிறைவு செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Everything You Need To Know About The Flagship OnePlus 8T Launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X