Home
Mobile

மோட்டோ ஜி6 தொடரின்கீழ் வெளியாகும் மூன்று மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள்.!

மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 ப்ளஸ் மற்றும் மோட்டோ ஜி6, பிளே ஆகிய மூன்று கருவிகளின் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

By Muthuraj

கடந்த ஆண்டு நிகழ்ந்த எம்டபிள்யூசி நிகழ்வில் அறிவிக்கப்பட்ட லெனோவா மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே, இந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி6 தொடர் கருவிகள் வெளியாகுமென நம்பப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. தற்போது சற்று தாமதமாக மோட்டோ ஜி 6 தொடர் கருவிகள் பற்றிய தகவல்கள், அதாவது மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 ப்ளஸ் மற்றும் மோட்டோ ஜி6, பிளே ஆகிய மூன்று கருவிகளின் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிய சந்தைகளுக்கான விற்பனை.!

ஆசிய சந்தைகளுக்கான விற்பனை.!

தாய்லாந்து மற்றும் இந்தோனேஷிய வெளியீட்டிற்கான பிணைய சான்றிதழ்களை மோட்டோ ஜி6 தொடர் கருவிகள் பெற்றுள்ளதால், இவைகளின் ஆசிய சந்தைகளுக்கான விற்பனையானது, மென்பது உறுதியாகியுள்ளது.

மோட்டோ ஜி6 அம்சங்கள்.!

மோட்டோ ஜி6 அம்சங்கள்.!

அம்சங்களை பொறுத்தமட்டில், மோட்டோ ஜி6 ஆனது பழைய ஜி5 வரிசையில் இடம்பெற்ற தரமான மெட்டல் வடிவமைப்புக்கு பதிலாக மிகவும் பிரீமியம் வடிவமைப்பான கண்ணாடி சாண்ட்விச் வடிவமைப்பை பெற்றுள்ளது. ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட நவநாகரீக டிஸ்பிளே கொண்டிருக்கும் ஜி6 ஆனது, அதன் முன் பக்கத்தின் மேல் பகுதியில் கேமரா மற்றும் சென்சார்களுக்கான இடத்தை ஒதுக்கி, நாடி பகுதியில் ஹோம் ஸ்க்ரீன் உடன் உட்பொதிக்கப்பட்ட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது.

12எம்பி மற்றும் 5எம்பி என்கிற இரட்டை பின்புற கேமரா.!

12எம்பி மற்றும் 5எம்பி என்கிற இரட்டை பின்புற கேமரா.!

முன்னர் வெளியான லீக்ஸ் தகவலின்படி, மோட்டோ ஜி6 ஆனது ஒரு 5.7 அங்குல முழு எச்டி+ (2160 x 1080) டிஸ்பிளே கொண்டிருக்கும் மற்றும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மூலம் இயக்கப்படும். ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி சக்தியூட்டப்படும் இக்கருவியின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 12எம்பி மற்றும் 5எம்பி என்கிற இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

மோட்டோ ஜி 6 பிளஸ் அம்சங்கள்.!

மோட்டோ ஜி 6 பிளஸ் அம்சங்கள்.!

புதிய மோட்டோ ஜி தொடர் குடும்பத்தின் ப்ளஸ் மாறுபாடான மோட்டோ ஜி6 பிளஸ் ஆனது ஒரு 5.9 அங்குலம் என்கிற டிஸ்ப்ளே அளவை தவிர, மோட்டோ ஜி6 கொண்டுள்ள அதே வடிவமைப்பையே கொண்டிருக்கும். அதாவது இதன் திரை தெளிவுத்திறன் ஆனது 2160 x 1080 பிக்சல்கள் கொண்டதாக இருக்கும்.

3ஜிபி, 4 ஜிபி மற்றும் 6ஜிபி ரேம்.!

3ஜிபி, 4 ஜிபி மற்றும் 6ஜிபி ரேம்.!

செயலியை பொறுத்தமட்டில், 2.2ஜிகாஹெர்ட்ஸ் உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் கொண்டு இயங்கலாம். சேமிப்பை பொறுத்தமட்டில், 3ஜிபி, 4 ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் என்கிற மூன்று ரேம் வகைகளின்கீழ் வெளியாகலாம். பிளஸ் மாடல் என்பதால் ஒரு பெரிய 3200எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும். இக்கருவி ஐந்து வெவ்வேறு வண்ண விருப்பங்கள் வெளியாகுமென்றும் கூறப்படுகிறது.

12எம்பி + 5எம்பி என்கிற இரட்டை கேமரா அமைப்பு.!

12எம்பி + 5எம்பி என்கிற இரட்டை கேமரா அமைப்பு.!

பொதுவாக, பிளஸ் மாறுபாடானது சிறந்த கேமராவை கொண்டிருக்கும். ஆனால் மோட்டோ ஜி6 தொடர் வழக்கில், ஜி6 ப்ளஸ் ஆனது ஜி6 கொண்டுள்ள அதே கேமரா சென்சார்களை தான் கொண்டிருக்கிறது. அதாவது பின்புறத்தில் 12எம்பி + 5எம்பி என்கிற இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

மோட்டோ ஜி6 பிளே அம்சங்கள்.!

மோட்டோ ஜி6 பிளே அம்சங்கள்.!

மோட்டோ ஜி6 ப்ளே ஆனது ஜி6 வரிசையில் கிடைக்குமாறு மலிவான மாடலாக இருக்கும். இருப்பினும் கூட இந்த சாதனம் பெஸல்லெஸ் வடிவைப்பு, 18: 9 என்கிற காட்சி விகிதம் போன்ற ஹை-எண்ட் அம்சங்களை கொண்டிருக்கும். ஆனாலும் கூட, அதன் உடன்பிறப்புகளை போலவே ஜி6 பிளே ஆனதும் அதன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உடன் ஒற்றை பின்புற கேமராவை கொண்டிருக்கும்.

இரண்டு ரேம் மற்றும் சேமிப்பு வகை.!

இரண்டு ரேம் மற்றும் சேமிப்பு வகை.!

முன்னர் வெளியான லீக்ஸ் தகவல்களின்படி, ஜி6 பிளே ஆனது ஒரு 5.7 அங்குல எச்டி + டிஸ்பிளே, 1440 x 720 என்கிற பிக்ஸல் தீர்மானம், குறைந்த சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி ஆகியவைகளை கொண்டிருக்கும் மற்றும் இக்கருவி இரண்டு ரேம் மற்றும் சேமிப்பு வகைகளில் - 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி - வெளிவரும்.

4000எம் ஏஎச் பேட்டரி.!

4000எம் ஏஎச் பேட்டரி.!

கேமராவை பொறுத்தமட்டில், ஜி6 பிளே ஆனது அதன் முன் மற்றும் பின்பக்கத்தில் 16எம்பி சென்சாரை கொண்டுவருமென கூறப்படுகிறது. மேலும் ஒரு பெரிய 4000எம் ஏஎச் பேட்டரி கொண்டிருக்குமென நம்பப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது டைப்-சி போர்ட்டுக்கு பதிலாக மைக்ரோ யூஎஸ்பி கொண்டு வெளியாக அதிக வாய்ப்புண்டு.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

இந்த அனைத்து கருவிகளுமே, சமீபத்திய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இதன் பின்புற கண்ணாடி வடிவமைப்பானது வயர்லெஸ் சார்ஜ் ஆதரவையும் எதிர்பார்க்க தூண்டுகிறது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்குதமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Everything You Need to Know About the Motorola Moto G6 Family. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X