சாம்சங், ஆப்பிள், எல்ஜி வயிற்றில் புளியை கரைக்கும் ஒன்ப்ளஸ் 5டி.!

|

ஒருவழியாக, வலிமைமிக்க ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நாள் வந்துவிட்டது. நியூ யார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் வெளியாகும் ஒன்ப்ளஸ் 5டி பற்றிய பல லீக்ஸ் தகவல்களை பார்த்து சலித்துப்போன நமக்கு இன்று அதன் உண்மையான அம்சங்கள் தெரியவரும்.

சாம்சங், ஆப்பிள், எல்ஜி வயிற்றில் புளியை கரைக்கும் ஒன்ப்ளஸ் 5டி.!

ஒன்ப்ளஸ் 5டி ஆனது சாம்சங், ஆப்பிள், எல்ஜி ஆகியவற்றின் விலை உயர்ந்த முதன்மை ஸ்மார்ட்போன்களை ஒரு வழிசெய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அந்த அளவிலான 'மிக முன்னேறிய கைபேசியாக மற்றும் ஸ்மார்ட்போன் பயனர் அனுபவத்தை சிறந்த முறையில் வழங்கும் மேல்-வரிசை வன்பொருள் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆகியவைகள் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போன் கொண்டு வருகிறது.

விலை மற்றும் கிடைக்கும்தன்மை.!

விலை மற்றும் கிடைக்கும்தன்மை.!

ஒன்ப்ளஸ் 5டி ஆனது ரூ.40,000/-க்குள் என்ற ஒரு விலைப்பிரிவின் கீழ் நவம்பர் 21-ஆம் தேதி "அமேசான் இந்தியா" மற்றும் "ஒன் பிளஸ்ஸ்டோர்" ஆகியவற்றில் இந்திய நேரப்படி மாலை 4.30-க்கு ஒரு "ஆரம்ப அணுகல் விற்பனையை" நிகழ்த்தும். பின்னர் அதன் உத்தியோகபூர்வ விற்பனையானது நவம்பர் 28-ஆம் தேதி முதல் தொடங்கும்.

ஒட்டுமொத்த பேக்கேஜ்.!

ஒட்டுமொத்த பேக்கேஜ்.!

இந்த ஸ்மார்ட்போன் ஒரு புதிய 18: 9 என்ற காட்சி விகிதத்துடனான 6 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுவர அதிக வாய்ப்புள்ளது. நிறுவனத்தின் மிக உயர்ந்த மற்றும் பாராட்டப்பட்ட பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் கூடிய ஒரு பெரிய 3450எம்ஏஎச் பேட்டரி அலகு கொண்டிருக்கலாம். உடன் வேகமான செயல்பாட்டிற்கான ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயங்கும் மற்றும் பல்பணிக்கு உதவும் வண்ணம் 8ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் முறையே 128 ஜிபி மற்றும் 64 ஜிபி உள் நினைவகம்து கொண்டிருக்கலாம்.

மேம்படுத்தப்பட்ட கேமரா.!

மேம்படுத்தப்பட்ட கேமரா.!

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் ஆனது உலகளாவிய லென்ஸ் கேமரா செட் அப் மூலம் உலகத்தை இன்னும் அழகாக காட்டியது. அதேபோல புதிய ஒன்ப்ளஸ் 5டி ஆனதும் ஒரு புதிய கேமரா செட்-அப் மூலம் மரபுகளை மாற்றும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட இரட்டை கேமரா அமைப்பு வர எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் 5 உடன் ஒப்பிடும்போது புதிய ஒன்ப்ளஸ் 5டி சாதனத்தின் கேமராவானது ஒரு பெரிய செட் செக்டர்களைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் ஸ்ட்ரீம் திரையிடப்படுகிறது.!

லைவ் ஸ்ட்ரீம் திரையிடப்படுகிறது.!

நுகர்வோர் மற்றும் ஒன்ப்ளஸ் பயனர் சமூகம் ஆகிய அனைவரும் காணும் வண்ணம் பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற நாட்டின் ஐந்து நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிவிஆர் திரையரங்குகளில் நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீம் திரையிடப்படுகிறது. ரூ.99/- என்ற விலைக்கு புக்மைஷோ ஆப் வழியாக விற்பனையை செய்த சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டன. டிக்கெட் விற்கப்பட்டாலும் கூட, அதிகாரப்பூர்வ ஒன்ப்ளஸ் வலைத்தளத்தில் நீங்கள் லைவ் ஸ்ட்ரீமை காணலாம். பிவிஆர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் பிரத்தியேக டெமோ அமர்வுகளில் ஸ்மார்ட்போன்கள் சோதிக்க மற்றும் சோதனை செய்யவும் வாய்ப்பு இருக்கும்.

முன்பதிவு செய்யும் வாய்ப்பு.!

முன்பதிவு செய்யும் வாய்ப்பு.!

எல்லாவற்றிற்கும் மேலாக வெளியீட்டு அமர்வுகளிலேயே ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாய்ப்பும் ரசிகர்களுக்கு வழங்கப்படும். அதாவது சந்தையில் யாருமே முன்பதிவு செய்யாத ஒரு கருவி உங்களுக்கு முன்பதிவு செய்ய கிடைக்கும். ஒருவேளை, நீங்கள் வெளியீட்டு லைவ் ஸ்கிரீனில் கலந்துகொள்ளாதவர் என்றால் நவம்பர் 28 வரை முன்பதிவு செய்ய காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Everything you need to know about OnePlus 5T. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X