அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா iPhone-ஐ வெளியிட்ட சீன கம்பெனி.. கதறும் Apple.. என்ன மாடல்? என்ன விலை?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் அறிமுகமாக இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. நினைவூட்டும் வண்ணம் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதியன்று ஐபோன் 15 சீரீஸின் (iPhone 15 Series) கீழ் 4 புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இந்நிலைப்பாட்டில் சீன மொபைல் போன் நிறுவனமொன்று, அச்சு அசலாக ஐபோனை போலவே இருக்கும் ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது; அதுவும் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது இஸட்டிஇ (ZTE) நிறுவனத்தின் ஆக்ஸான் 50 லைட் (Axon 50 Lite) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஆக்ஸான் 50 சீரீஸின் கீழ் வெளியாகும் இரண்டாவது போனாகும். நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸான் 50 அல்ட்ரா (Axon 50 Ultra) அறிமுகமானது.
ஆக்ஸான் 50 லைட் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இது செல்பீ கேமராவிற்கான டியர் டிராப் நாட்ச் (Tear drop notch) வடிவமைப்பு, 2408 x 1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) ரெசல்யூஷன் மற்றும் 20:9 ரேஷியோவுடன் வரும் 6.6-இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (IPS LCD) கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட இஸட்டிஇ நிறுவனத்தின் சொந்த மைஓஎஸ் யுஐ (MyOS UI) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 'ஹைலைட்டே' இதன் ரியர் கேமரா செட்டப் தான். ஏனென்றால் இதை பார்ப்பதற்கு அப்படியே ஐபோனில் உள்ள கேமரா செட்டப்பை போலவே உள்ளது.
இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் (Triple Rear Camera Setup) 50 மெகாபிக்சல் மெயின் கேமரா (எப்/1.8) + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளன. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பெயர் குறிப்பிடாத ஆக்டா-கோர் ப்ராசஸர் (Octa-core processor) மூலம் இயங்கும் ஆக்ஸான் 50 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி அளவிலான "வழக்கமான" ரேம் உடனாக 10ஜிபி அளவிலான விர்ச்சுவல் ரேம்-ஐயும் (Virtual RAM) வழங்குகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை 256ஜிபி மெமரியை வழங்குகிறது.
கடைசியாக இது 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது, கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம் சப்போர்ட், 5ஜி ஆதரவு, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி-சி போர்ட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Finger Print Scanner) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது.
ஆக்ஸான் 50 லைட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? மெக்சிகோவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.20,750 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் க்ரீன், பிளாக் மற்றும் பர்பிள் என்கிற 3 கலர் ஆப்ஷன்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை. அதுகுறித்த தகவல் வெளியானால் உடனே அப்டேட் செய்கிறோம்.
செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் புதிய ஐபோன்களை பொறுத்தவரை, ஐபோன் 15 சீரீஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும்: ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro), ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)அல்லது ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Max).


Click it and Unblock the Notifications








