தனது புதிய ஸ்மார்ட்போனுடன் பந்தயத்தில் இறங்கும் பானாசோனிக்!

பி-07சி என்ற தனது முதல் ஸ்மார்ட்போனை மார்க்கெட்டுக்கு அறிமுகம் செய்து வைத்து இருக்கிறது இந்நிறுவனம். 4.3 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த மொபைல், 7.5 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும். இது 480 X 854 திரை துல்லியத்தை கொடுப்பதன் மூலம், கண்களை கவரும் வண்ண காட்சிகளை பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் ரகத்தில் வருவதால் இது அதிக திறன் கொண்ட கேமராவுடன்தான் வரும் என்று எதிர்பார்க்கலாம். இதில் வைஃபை தொழில் நுட்பமும் உள்ளது. இதனால் மிக எளிதாக இன்டர்நெட் வசதியை பெறலாம். இந்த பி-07சி மொபைல் 300 நிமிடங்கள் டாக் டைமினையும், 340 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் தரும்.
பானாசோனிக் தனது ஸ்மார்போன்களை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தி தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த இருக்கிறது.
இந்த மொபைல் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும் என்றும், அதி நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த மொபைல்களின் விலையை அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது பானோசோனிக்.


Click it and Unblock the Notifications