உங்கள் ஸ்மார்ட்போனை சேதாரத்தில் இருந்து காப்பாற்ற சில முக்கிய டிப்ஸ்கள்

By Siva
|

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் போன் அழைப்புகாக மட்டுமின்றி ஒவ்வொரு மனிதனின் இன்றியமையாத தேவையாகவும் மாறிவிட்டது. குறைந்தது சராசரியாக ஒவ்வொருவரும் 4 மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம்.

உங்கள் ஸ்மார்ட்போனை சேதாரத்தில் இருந்து காப்பாற்ற சில முக்கிய டிப்ஸ்கள

அது அழைப்புக்காகவோ, எஸ்.எம்.எஸ், அனுப்புவதற்காகவோ, சமூக வலைத்தளங்கள், டிக்கெட் புக் செய்ய, ஷாப்பிங் செய்ய, ஆப்ஸ்கள் டவுண்லோடு செய்ய, வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய என பலவிதங்களிலும் ஸ்மார்ட்போன் உதவுகிறது.

மொபைல் போன் என்பது ஒருவரை தொடர்பு கொள்ள மட்டுமே என்ற நிலை மாறி தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்துமே நம்முடைய பாக்கெட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டர் எந்த அளவுக்கு பயன்படுகிறதோ அதற்கு இணையாக அனைத்து பணிகளுக்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தபடுகிறது.

புகைப்படங்கள், வீடீயோக்களை எடுத்து சேவ் செய்வது, முக்கியமான டாக்குமெண்ட்களை பத்திரப்படுத்தி வைப்பது, ஏன் ஏடிஎம் பின் நம்பர்களை கூட ஒருசிலர் ஸ்மார்ட்போனில்தான் சேமித்து வைத்துள்ளனர். எனவே இன்றைய நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் இல்லாமல் நீங்கள் வெளியே செல்ல முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை

இந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட ஸ்மார்ட்போனை நாம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம் என்பது குறித்து எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? நம்முடைய கவனக்குறைவாலும் எதிர்பாராத விதத்தாலும் ஸ்மார்ட்போன் சேதம் அடைய நிறைய வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு ஸ்மார்ட்போனை எப்படி எல்லாம் பாதுகாப்பாக வைத்து கொள்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

கவனமாக கையாள வேண்டும்:

கவனமாக கையாள வேண்டும்:

ஒரு ஸ்மார்ட்போனை பூவைப் போன்று மென்மையாக கையாள வேண்டும். அதே நேரம் ஸ்க்ரீன் பாதுகாப்பு இல்லாத ஸ்மார்ட்போனை கீழே அல்லது மேஜை மிது வைக்கும்போது கரடுமுரடான இடத்தில் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் ஸ்க்ரீன் ஸ்க்ராட்ச் ஆக வாய்ப்பு உள்ளது. வீடு என்றால் ஸ்மார்ட்போனை ஒரே இடத்தில் வைத்து பழக்குவது நன்று.

பாதுகாப்பான உறை முக்கியம்:

பாதுகாப்பான உறை முக்கியம்:

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்கும் பலர் ஒருசில நூறுகள் கொடுத்து பாதுகாப்பான கவர் வாங்க யோசிப்பார்கள்.விலை உயர்ந்த ஸ்மார்ட்போனுக்கு நிச்சயம் ஒரு பாதுகாப்பான பாலிகார்பனேட் உறை மிக முக்கியம்.

இந்த வகை கவர்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களை கீழே விழுந்தால் பாதுகாப்பது மட்டுமின்றி டூயல் ஸ்வைப் செய்யவும் உதவுகிறது. டூயல் ஸ்வாஇப் மூஅல்ம் ஸ்க்ரீன் இரண்டு பகுதிகளாக தெரியும். அழைப்புகள் வரும்போது கவரை ஓப்பன் செய்யாமலேயே அழைப்பை எடுக்கவோ அல்லது மறுக்கவோ செய்யலாம்

தற்போது சந்தைக்கு வரும் பெரும்பாலான போன்களில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் வசதி உள்ளது. இவ்வகை வசதியுள்ள ஸ்மார்ட்போன்களை வாங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை.

ஆனால் ஒருவேளை வாட்டர் ரெசிஸ்டெண்ட் இல்லாத போனாக இருந்தால் மிக மிக கவனமாக தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்

டிஸ்ப்ளே ரொம்பம் முக்கியம் பாஸ்

டிஸ்ப்ளே ரொம்பம் முக்கியம் பாஸ்

ஒரு மொபைல் போனுக்கு உயிர்நாடியே அதன் டிஸ்ப்ளேதான். டிஸ்ப்ளே போய்விட்டால் அந்த போன் கிட்டத்தட்ட குப்பைதான். எனவே டிஸ்ப்ளேவுக்கு எந்தவித சேதாரமும், குறிப்பாக உடைந்துவிட்டாதபடியோ, அல்லது ஸ்க்ராட்ச் ஆகாதபடியோ பார்த்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. சிறு கவனக்குறைவால் மிகப்பெரிய செலவை வைத்துவிடுவது இந்த டிஸ்ப்ளேதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளேவை பாதுகாத்து கொள்ள ஒரே வழி ஸ்க்ரின் புரொடக்டர் என்ற டெம்பர் கண்ணாடிதான். ஒவ்வொரு மாடலுக்கும் என்று தனியாக டெம்பர் கிளாஸ் இருக்கும்.

நம்முடைய மாடலுக்கு பொருத்தமான டெம்பர் கிளாஸை வாங்கி போட்டுக்கொண்டால் கவனக்குறைவாக கீழே இழுந்தாலும் டெம்பர் கிளாஸ் மட்டுமே சேதம் அடையும். எனவே ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை டெம்பர் கிளாஸ் வாங்க வேண்டியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கெட்டில் போனை மட்டும் வைக்கணும் மக்களே!

பாக்கெட்டில் போனை மட்டும் வைக்கணும் மக்களே!

ஸ்மார்ட்போனை நமது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது அதே பாக்கெட்டில் சாவி, சில்லரை காசுகள் உள்பட வேறு பொருட்களை வைக்காமல் இருப்பது டிஸ்ப்ளேவை ஸ்க்ராட்சில் இருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி காசையோ அல்லது சாவியையோ எடுக்கும்போது ஸ்மார்ட்போன் பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடாமலும் பாதுகாக்க உதவும்

சார்ஜ் செய்வதையும் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க

சார்ஜ் செய்வதையும் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க

வீடியோ பார்ப்பது, இண்டர்நெட்டில் உலாவுவது ஆகியவை காரணமாக ஸ்மார்ட்போனில் மிக வேகமாக சார்ஜ் காலியாகிவிடும் ஆபத்து உள்ளது. எனவே ஒரு ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஏற்றி வைத்து கொள்வது என்பது மிக முக்கியம்

ஆனால் அதே நேரத்தில் பிளக் சுவிட்சை பார்க்கும்போதெல்லாம் சார்ஜ் ஏற்ற கூடாது. அதிகமாக சார்ஜ் ஏற்றுவதும் அடிக்கடி சார்ஜ் ஏற்றுவதும் மொபைல் போனின் ஆயுளை குறைத்துவிடும். காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது ஃபுல் சார்ஜ் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள், பின்னர் அடுத்து எப்போது சார்ஜ் மிகக்குறைவான அளவில் இருக்கின்றதோ, அந்த நேரத்தில் மீண்டும் சார்ஜ் செய்தால் போதும். அனேகமாக ஒரு நாளைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் இரண்டு முறை மட்டும் சார்ஜ் செய்து வந்தால் ஸ்மார்ட்போனின் ஆயுள் நீடிக்கும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Today smartphones have become an integral part of our life.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X