Home
Mobile

AI-ஐ சரியா யூஸ் பண்றான்யா.. CMF Phone 2 Pro-வில் Essential Space அம்சம், Essential Key.. இதில் என்ன ஸ்பெஷல்?

நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆன சிஎம்எப் (CMF) பிராண்ட் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, அதன் 2வது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) மாடலாகும். இது குறிப்பிட்ட தேதியில் இந்தியா மற்றும் உலகளவில் அறிமுகமாக உள்ளது

அறிமுகத்திற்கு முன்னதாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது (டிசைன், சார்ஜர் பிரிக், கேமரா அம்சங்கள்) அந்த வரிசையில் தற்போது. சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஏஐ திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

CMF Phone 2 Pro-வில் Essential Space அம்சம், Essential Key பட்டன்!

கடந்த மார்ச் 4 ஆம் தேதி நத்திங் போன் 3ஏ சீரீஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஐ அடிப்படையிலான எசன்ஷியல் ஸ்பேஸ் (Essential Space) அம்சமானது சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்பதையும், இதற்காக ஒரு பிரத்யேக பட்டன் இருக்கும் என்பதையும் சிஎம்எப் பை நத்திங் (CMF by Nothing) உறுதிப்படுத்தியுள்ளது.

சிஎம்எப் போன் 2 ப்ரோ மாடலில் எசன்ஷியல் ஸ்பேஸ்: எக்ஸ் தளம் வழியிலான ஒரு பதிவில், பயனர்கள் சிஎம்எப் போன் 2 ப்ரோவில் தங்கள் "இரண்டாவது மெமரி" ஆன எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. நத்திங் போன் 3ஏ சீரீஸ்-ஐ போலவே, இது பவர் பட்டனுக்கு அடுத்ததாக, ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் அமைந்துள்ள ஒரு பிரத்யேக "எசன்ஷியல் கீ" (Essential key) மூலம் செயல்படுத்தப்படும்.

இது செயல்படுத்தப்பட்டதும், எசன்ஷியல் ஸ்பேஸ் ஆனது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற அனைத்து வகையான டேட்டாவையும் சேகரித்து, ஏஐ-ஐ பயன்படுத்தி அவற்றை நினைவுபடுத்துவதற்கான ஒன்-ஸ்டாப் சொல்யூஷனாக செயல்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் - ஸ்மார்ட் கலெக்ஷன்ஸ் (Smart Collections) என அழைக்கப்படும் மற்றொரு அம்சத்தை பெறுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கலெக்ஷன்ஸ் ஆனது - ஆடியோ, போட்டோஸ் மற்றும் டெக்ஸ்ட் என டேட்டாக்களை வகைப்படுத்தி தொடர்புடைய கலெக்ஷன்களில் வைப்பதன் மூலம், அதை மேனுவல் (Manual) ஆக செய்யும் வேலையை இல்லாமல் ஆக்குகிறது. ஆனால் நத்திங் போன் 3ஏ சீரிஸில் உள்ள எசன்ஷியல் கீ ஆனது கேமரா கேப்சர் அம்சத்தை ஆதரிப்பது போல சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள எசன்ஷியல் கீயும் செயல்படுமா என்பது தெரியவில்லை.

அறியாதோர்களுக்கு கேமரா கேப்சர் அம்சம் மூலம், கேமரா இயக்கப்படும்போது பயனர்கள் விரைவாக புகைப்படங்களை எடுத்து எசென்ஷியல் ஸ்பேஸுக்கு அனுப்ப முடியும். முன்னரே குறிப்பிட்டபடி சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் என்பது மட்டுமின்றி, இதன் ஒட்டுமொத்த இமேஜிங் செயல்திறனை வெளிப்படுத்தப்பட்டு இருந்தது.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்டுடன் இணைந்து மிட்-ரேன்ஜ் வரம்பில் ஒரு அரிய கேமரா ஹார்ட்வேர் ஆன டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது. இந்த அப்கிரேட்கள் வழியாக சிஎம்எப் நிறுவனம் இந்த ஸ்மார்போனிற்கான பெயரில் உள்ள ப்ரோ என்கிற வார்த்தைக்கு பலம் சேர்ந்துள்ளன என்றே கூறலாம்.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1/1.57-இன்ச் சென்சார் (நத்திங் போன் 3ஏ மாடலில் உள்ள அதே சென்சார்) உடனான 50எம்பி வைட் ஆங்கிள் லென்ஸையும், 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸையும், 119.5° பீல்ட் ஆப் வியூ உடனான 8MP அல்ட்ரா-வைட் லென்ஸையும் கொண்டிருக்கும் என்பதை பிளிப்கார்ட் வழியாக வெளியான விவரங்கள் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும் டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ராவைடு சென்சார்களின் அளவுகள் குறித்த விவரங்கள் இல்லை. முன்னதாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் பிரிக் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் சிஎம்எப் உறுதிப்படுத்தி இருந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Essential Key AI Powered Essential Space Confirmed in CMF Phone 2 Pro Ahead April 28 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X