Home
Mobile

பெர்ஃபார்மென்சில் பின்ன வரும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Super

பெர்ஃபார்மென்சில் பின்ன வரும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!
மோட்டோரோலாவின் புதிய மொபைல்கள் ஒவ்வொன்றும் வெற்றிப் படிக்கட்டை தொட்டுகொண்டு இருக்கின்றது. இந்நிலையில் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

எக்ஸ்டி-928 என்பதே அந்த புதிய ஸ்மார்ட்போன். இது ஒர் அற்புதமான தோற்றத்தை கொண்டிருக்கிறது. இப்படிபட்ட அழகிய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் 4.5 இஞ்ச் திரை மிக மிக துல்லியமாக இருக்கும். இந்த அகன்ற திரை 1280 x 720 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். ஆன்ட்ராய்டு பற்றிய தகவல்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் செய்தி, எக்ஸ்டி-928 ஸ்மார்ட் மொ ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும். இந்த ஓஎஸ் இயங்க இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் உதவுகிறது.

கேமராவை பற்றிய கவலையே தேவையில்லை. 4,5 போன்ற மெகா பிக்ஸல் கேமராவை மக்கள் விரும்பிய காலம் போய் இப்பொழுது அதைவிட அதிக பிக்ஸல் கொண்ட கேமராவினை மக்கள் எதிர் பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த விருப்பத்திற்கு ஏற்ப எக்ஸ்டி-928 ஸ்மார்ட் மொபைல் அழகான புகைப்படத்தையும், வீடியோவினையும் வழங்கும்.

கேமராவே இவ்வளவு உயர்ந்த தொழில் நுட்பத்தில் இருக்கும் பொழுது, வைபை வசதி இருக்காதா என்ன? நிச்சயம் இந்த மோட்டோ மொபைல் வைபை வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்.

இதன் புளூடூத், யூஎஸ்பி வசதியின் மூலம் தகவல்களை எளிதாக பரிமாற்றமும், பதிவேற்றம் செய்ய முடியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள் அனைத்தும் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். இந்த எக்ஸ்டி-928 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படாததால், சரியாக தெரியவரவில்லை.

வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் மொபைல்களை கொடுத்த மோட்டோரோலா நிறுவனம் நிச்சயம், இதன் விலையையும் அனைவருக்கும் பிடித்த வகையில் நிர்ணயம் செய்யும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X