16000எம்ஏஎச் பேட்டரி & 4 கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எனர்ஜைசர் ஹார்டுகேஸ் எச்590எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
தற்சமயம் 16000எம்ஏஎச் பேட்டரி மற்றும் அசத்தலான 4 கேமரா அம்சங்களுடன் புதிய எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி16கே ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனுடன் எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி490எஸ் மற்றும் எனர்ஜைசர் ஹார்டுகேஸ் எச்590எஸ் போன்ற ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது எனர்ஜைசர் நிறுவனம். அதன்பின்பு இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி490எஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி16கே ப்ரோ:
எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி16கே ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2160 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி25 சிப்செட் இவற்றுள் அடக்கம்.

எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி16கே ப்ரோ கேமரா:
எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி16கே ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்பி + 13 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி + 5 எம்பி டூயல் கேமரா
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 16000எம்ஏச் பேட்டரி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி490எஸ்:
எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி490எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 4.95-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 480x854 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் ஆக்டாகோர் மீடியாடெக் எம்டி6739 சிப்செட் இவற்றுள் அடக்கம்.

எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி490எஸ்:
எனர்ஜைசர் பவர் மேக்ஸ் பி490எஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி + 0.3 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5எம்பி + 0.3 எம்பி டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

எனர்ஜைசர் ஹார்டுகேஸ் எச்590எஸ்:
எனர்ஜைசர் ஹார்டுகேஸ் எச்590எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2160 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் ஆக்டாகோர் மீடியாடெக் பி23 சிப்செட் இவற்றுள் அடக்கம்.


எனர்ஜைசர் ஹார்டுகேஸ் எச்590எஸ் கேமரா:
எனர்ஜைசர் ஹார்டுகேஸ் எச்590எஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி + 0.3 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி + 0.3 எம்பி டூயல் செல்பீ கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 5800எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications