டச் டைப், கிவெர்ட்டி கீபேட், ஸ்லைடருடன் புதிய எல்ஜி மொபைல்!

Posted By: Staff
டச் டைப், கிவெர்ட்டி கீபேட், ஸ்லைடருடன் புதிய எல்ஜி மொபைல்!
மொபைல்போன் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் முதலில் எதிர்பார்க்கும் விஷயம் எளிதாக டைப் செய்யும் வசதி இருக்கிறதா என்பதுதான். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கிவெர்ட்டி கீபேட் கொண்ட புதிய போனை எல்ஜி அறிமுகம் செய்துள்ளது.

பீக்கன் என்ற பெயரில் எல்ஜி அறிமுகம் செய்துள்ள இந்த போன் கிவெர்ட்டி கீபேட் மட்டுமின்றி டச் பேடு டைப் வசதியும், ஸ்லைடரையும் கொண்டிருக்கிறது.

இது 2.8 இஞ்ச் டிஎப்டி திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர, 1.3 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

சிடிஎம்ஏ என்று கூறப்படும் இன்பில்ட் சிம் கார்டு பொருத்தும் வசதிகொண்டதாக இருக்கிறது பீக்கன். இது 124 கிராம் எடையையும், 90 எம்பி இன்டர்னல் மெமரியையும் கொண்டிருக்கிறது.

இதில், 16 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்வதற்கு ஏதுவாக மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டும் இருக்கிறது. இதில், 1,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதால் 6 மணிநேர டாக் டைமும், 480 மணி நேரம் ஸ்டான்ட் பை டைமையும் கொடுக்கும்.

போதுமான வசதிகள் மற்றும் அழகிய வடிவமைப்பு கொண்ட இந்த மொபைல்போன் ரூ.4,000 விலைக்குல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்