Home
Mobile

மூன்று பிரைமரி கேமராக்களுடன் களமிறங்கும் 2019 ஐபோன்கள்.!

ஐபோன் எக்ஸ்எஸ் மற்றம் எக்ஸ்ஆர் மாடல்களை விட மேம்பட்ட ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஐபோன்களின் விற்பனை சற்று குறைவாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும், சமீபத்தில் வெளிவந்த ஐபோன் எக்ஸ் சாதனங்களில் பல்வேறு மென்பொருள் பிரச்சணைகள் உள்ளது என்றும், பின்பு சில இடங்களில் புதிய
ஐபோன் வெடித்துள்ளது என்று பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

மூன்று பிரைமரி கேமராக்களுடன் களமிறங்கும் 2019 ஐபோன்கள்.!

இந்நிலையில் ஐபோன் எக்ஸ்எஸ் மற்றம் எக்ஸ்ஆர் மாடல்களை விட மேம்பட்ட ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி விரைவில் வெளிவரும் ஐபோன்கள் 5.8-இன்ச் மற்றும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புகளுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டிஸ்பிளே

டிஸ்பிளே

புதிய ஐபோன்கள் ஐபோன் XI அல்லது ஐபோன் 11 என அழைக்கப்படலாம். இருந்தபோதிலும் தற்சமயம் 2019ஐபோன்கள் என்றே அழைக்கப்படுகின்றன. பின்பு இந்த 2019 ஐபோன் மாடல்களில் ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்

சிப்செட்

பின்பு புதிதாக வரும் ஐபோன் மாடல்களின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஆப்பிள்
ஏ13 சிப்செட்கள் இந்த 2019 ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பின்பு புதிய சிப்செட்கள் அவற்றின் முந்தைய சீரிசை விட மேம்பட்டு இருக்கும்.

கேமரா:

கேமரா:

புதிய 2019 ஐபோன்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது, பின்பு ஐபோன்களில் டெப்த் அம்சங்களையும் தெளிவான படமாக்க முடியும் எனவும்,பின்பு ட்ரூ-டெப்த் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஐபோன்களில் 3x ஆப்டிக்கல் சூம் வசதி மற்றும் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. இதேபோன்று புதிய ஐபோன்களின் முன்பக்க ட்ரூ-டெப்த் கேமரா அதிகம் மேம்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் பென்சில்:

ஆப்பிள் பென்சில்:

விரைவில் வெளிவரும் புதிய ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி வழங்கப்படும் எனவும், பின்பு அந்த வகையில் 2019 ஐபோன்களின் சில மாடல்களில் ஆப்பிள் பென்சில் போன்ற ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படலாம் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மேலும் புதிய ஐபோன்களில் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் வழங்கப்படும், பின்பு 2019 ஐபோன் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் டிஸ்ப்ளேவினுள் டச் ஐ.டி. தொழில்நுட்பத்தை வழங்கலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது..

Best Mobiles in India

English summary
Early render suggests 2019's 'iPhone XI' could have triple-lens rear camera: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X