Home
Mobile

Mobile வழியாக OTT திரைப்படங்களை பார்ப்பீங்களா? அப்போ "இதை" தெரிஞ்சுகிட்டா நல்லது!

ஓடிடி தளங்கள் (OTT Platforms) வழியாக வெளியாகும் திரைப்படங்களை அல்லது வெப் சீரீஸ்களை, மொபைல் போன் வழியாக பார்க்கும் பழக்கம் கொண்ட அனைவருமே "சில குறிப்பிட்ட விவரங்களை' தெரிந்து வைத்துக்கொள்ளும் படி நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

அப்படியாக நீங்கள் தெரிந்துகொள்ளும் விவரங்களானது, இன்றோ.. நாளையோ உதவவில்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள் உங்களுக்கு கைகொடுக்கலாம்.

அதென்ன விவரங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

விலை முக்கியம் அமைச்சரே!

விலை முக்கியம் அமைச்சரே!

நாம் இங்கே பேசுவது - மொபைல் வழியாக மட்டுமே அணுக கிடைக்கும் ஓடிடி சேவைகளை பற்றியும், அந்தந்த OTT சேவைகளின் விலை விவரங்களை பற்றியே ஆகும்.

தற்போதைக்கு நீங்கள் அமேசான் ப்ரைம் சேவையை மட்டுமோ அல்லது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை மட்டுமோ பயன்படுத்தலாம். நாளை பின்னர் வேறு சில ஓடிடி தளங்களின் தேவைகள் ஏற்படலாம்.

அந்த நேரத்தில்.. எந்த சேவைக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? எதை தேர்வு செய்யலாம்? என்று நீங்கள் குழப்பம் அடைய கூடாது அல்லவா? அதற்காகவே இந்த கட்டுரை!

01. அமேசான் ப்ரைம்: மொபைல்-ஒன்லி பிளான்

01. அமேசான் ப்ரைம்: மொபைல்-ஒன்லி பிளான்

அமேசான் (Amazon) நிறுவனம் சமீபத்தில் தான் ப்ரைம் வீடியோவிற்கான (Prime Video) தனது மொபைல்-ஒன்லி சந்தாவை அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ.599 ஆகும் மற்றும் இது ஒரு வருடம் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.

பெயர் குறிப்பிடுவது போல, இந்த திட்டம் மொபைல் போன்கள் வழியாக மட்டுமே ப்ரைம் வீடியோவிற்கான அணுகலை வழங்கும்.

02. நெட்பிளிக்ஸ்: மொபைல் பிளான்

02. நெட்பிளிக்ஸ்: மொபைல் பிளான்

நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தின் மாதாந்திர சேவையை அணுக நீங்கள் ரூ.149 செலவழிக்க வேண்டி இருக்கும்.

இந்த திட்டமானது SD (480p) தரத்தின் கீழ், நெட்பிளிக்ஸ் தளத்தில் கிடைக்கும் அனைத்து கன்டென்ட்களுக்குமான அணுகலை வழங்குகிறது.

03. டிஸ்னி+ ஹாட்ஸ்டார்: மொபைல் பிளான்

03. டிஸ்னி+ ஹாட்ஸ்டார்: மொபைல் பிளான்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் (Disney Plus Hotstar) கீழ் மாதாந்திர திட்டம் என்று எதுவும் கிடையாது. ஆனால் மூன்று மாதங்களுக்கான மற்றும் 1 ஆண்டிற்கான வேலிடிட்டி உடன் கூடிய 2 திட்டங்கள் உள்ளன. அவைகளின் விலைகள் - முறையே ரூ.149 மற்றும் ரூ.499 ஆகும்.

இந்த இரண்டு திட்டங்களுமே விளம்பரங்களுக்கான ஆதரவுடன் வருகிறது மற்றும் ஒரு நேரத்தில் 1 டிவைஸில் மட்டுமே லாக்-இன் செய்ய அனுமதிக்கும்.

04. வூட் செலெக்ட்: மொபைல் பிளான்

04. வூட் செலெக்ட்: மொபைல் பிளான்

1 ஆண்டுக்கு வெறும் ரூ.299 ரூபாய் என்கிற செலவின் கீழ் உங்களால் வூட் செலெக்ட்டின் (VOOT Select) ஒடிடி சேவைகளை அணுக முடியும்.

இந்த திட்டத்தின் கீழ், உங்களால் ஒரே ஒரு மொபைல் போனின் கீழ் மட்டுமே லாக்-இன் செய்ய முடியும் மற்றும் உங்களால் 720p என்கிற தரத்தின் கீழ் கன்டென்ட்களை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்!

05. சோனி லைவ்: மொபைல் பிளான்

05. சோனி லைவ்: மொபைல் பிளான்

சோனி லைவ் (SonyLIV) மொபைல் திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.599 ஆகும். இது 720p என்கிற தரத்தின் கீழ் ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதிக்கும்; அதே சமயம் ஒரு நேரத்தில் ஒரே ஒரு மொபைல் போனில் மட்டுமே லாக்-இன் செய்ய முடியும்!

06. ஜீ5: மொபைல் பிளான்

06. ஜீ5: மொபைல் பிளான்

ஜீ5 (Zee5) ஓடிடி-யின் கீழ் எந்தவொரு மொபைல் ஒன்லி திட்டம் இல்லை. மாறாக இது முறையே ரூ.999 மற்றும் ரூ.399 விலையில் ஓராண்டு மற்றும் மூன்று மாத சந்தா திட்டங்களை வழங்குகிறது.

07.ஈரோஸ் நவ்: மொபைல் திட்டம்

07.ஈரோஸ் நவ்: மொபைல் திட்டம்

ஈரோஸ் நவ் (Eros Now) ஆனதும் எந்த விதமான மொபைல்-ஒன்லி திட்டத்தையும் வழங்கவில்லை. இது முறையே ரூ.49, ரூ.79 மற்றும் ரூ.399 என்கிற விலையின் கீழ் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்களை மட்டுமே வழங்குகிறது.

08. டிஸ்கவரி: மொபைல் பிளான்

08. டிஸ்கவரி: மொபைல் பிளான்

டிஸ்கவரி பிளஸின் (Discovery Plus) கீழ் இரண்டு திட்டங்கள் மட்டுமே கிடைக்கிறது - ஒன்று மாதாந்திர திட்டம் ஆகும், மற்றொன்று வருடாந்திர திட்டம் ஆகும். அந்த திட்டங்களின் விலைகள் முறையை ரூ.199 மற்றும் ரூ.399 ஆகும்.

Best Mobiles in India

English summary
Each and every OTT lovers need to know these mobile only plans from different OTT platforms in india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X