Home
Mobile

இலகு எடையில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Super

இலகு எடையில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!
தொடு திரை வசதி கொண்ட மொபைல்கள் வாடிக்கையாளர்களின் ஏகோபி்த்த வரவேற்பை பெற்றுள்ளன. அதே சமயத்தில் தொடுதிரையுடன் டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதி கொண்ட மொபைல் என்றால் வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியை அளிக்கும் என்பது திண்ணம்.

அந்த வகையில் எக்ஸ்டி-532 என்ற புதிய ஸ்மார்ட்போனை மோட்டோரோலா தற்போது வெளியிட்டுள்ளது. மிக ஸ்டைலான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மோட்டோரோலா எக்ஸ்டி-532 மொபைல்.

டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்டி-532 மொபைல் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டுள்ளது.320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தையும் கொடுக்கும். ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் 115 கிராம் எடையை கொண்டதாக இருக்கும்.

இந்த ஸ்மார்மொபைலில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இது ஆன்ட்ராய்டு 2.3.7 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 800 மெகாஹெர்ட்ஸ் வேகமாக இயங்க, கியூவல்காம்

எம்எஸ்எம்227T-1 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அட்ரினோ 200 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

கேமரா பற்றிய எதிர் பார்ப்பு மிக அதிகமாக இருப்பதால், அந்த எதிர் பார்ப்பை சரிவர இதில் கொடுத்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளதால், அதிகபட்சமாக 2592 X 1936 பிக்ஸல் துல்லியம் வரை கொடுக்கும். 256கே கலர்களுக்கும் இந்த மொபைல் வெகு சுலபமாக சப்போர்ட் செய்யும்.

ஜியோ டேகிங் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்மொபைலில் 512எம்பி இன்டர்னல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமையும் பெற இதில் லித்தியம்-அயான் பேட்டரி துணை புரிகிறது.

உயர்ந்த தொழில் நுட்பத்தினை எதிர் பார்க்கும்பொழுது அதன் விலையும் சற்று அதிகமானதாகத்தான் இருக்கிறது.

சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் இந்த எக்ஸ்டி-532 ல்மார்ட்போன் 30,000 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X