டியூவல் கோர் தொழில்நுட்பத்துடன் வரும் சீன ஸ்மார்ட்போன்!

By Super
|

டியூவல் கோர் தொழில்நுட்பத்துடன் வரும் சீன ஸ்மார்ட்போன்!
பொதுவாகவே எலக்ட்ரானிக்ஸ் படைப்புகளில் உலக நாடுகளை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி கொண்டிருக்கிறது சீனா. புதிய புதிய லேப்டாப், ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் சீன நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன.

அந்த வகையில் எம்எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை சீனாவை சேர்ந்த மெய்சூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜனவரி 1ந் தேதி புத்தாண்டு அன்று இந்த புதிய மொபைல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது டியூவல் கோர் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்.

மலிவு விலை கொண்ட மற்ற சீன ஸ்மார்ட் மொபைல்தானே என்று இந்த மொபைல்போனை முடிவு செய்துவிட முடியாது. இந்த எம்எக்ஸ் ஸ்மார்ட்போன் மூலம் சிறப்பான தரம் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் வரவேற்பு கொடுப்பர் என்று கூறலாம்.

0.41 இஞ்ச் தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்மொபைல் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. இதனால் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம். இதன் ஏவிஎஸ் 960 X 640 பிக்ஸல் கொண்ட 4 இஞ்ச் திரையினால் கண்களை கவரும் காட்சிகளை முழுமையாக கண்டு மகிழலாம்.

அதிக சத்தத்தை கொடுத்து மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க இதில் செகன்டரி மைக்ரோபோன் உள்ளது. டியூவல் கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் சாம்சங் எக்ஸைனோஸ் 4210 எஸ்ஓசி பிராசஸர் இந்த தொழில் நுட்பத்திற்கு ஒரு தனி தன்மையை வழங்கும்.

16ஜிபி வரை இதில் இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எம்எக்ஸ் ஸ்மார்ட்மொபைலின் தொழில் நுட்பம் நல்ல முறையில் இயங்க ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரீட் இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆண்டில் இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்து கொள்ளலாம் என்று மெய்சூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மெய்சூ எம்எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்பத்தினால், எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது.

3ஜி தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் அடுத்த ஆண்டில் சீனாவில் வெளியிடப்பட உள்ளது. இந்த மெய்சூ எம்எக்ஸ் ஸ்மார்ட் மொபைல் ரூ.20,000 விலையில் இருந்து ரூ.25,000 விலை வரையில் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பார்ப்பதற்கு கண்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எம்எக்ஸ் ஸ்மார்ட் மொபைல், பயன்பாட்டிற்கு எளிய நண்பனாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X