2016-ல் நாம் பார்த்து வியந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்
இந்த ஆண்டில்தான் ஸ்மார்ட்போனில் அதிக சிறப்பு அம்சங்கள் கடந்த ஆண்டுகளை விட அறிமுகம் செய்யப்பட்டன.
2016ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தைக்கு ஒரு பொற்காலம் என்றே கூறலாம். இந்த ஆண்டில்தான் ஸ்மார்ட்போனில் அதிக சிறப்பு அம்சங்கள் கடந்த ஆண்டுகளை விட அறிமுகம் செய்யப்பட்டன.

ஹூவாய் போன்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு அந்நிறுவனங்கள் பெரும் லாபத்தையும் சம்பாதித்தன. அதேபோல் சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி 7 மாடலால் தான் சம்பாதித்த பெயர், புகழ், பணம் ஆகியவற்றை இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
2016-ஆம் ஆண்டில் ரூ.10,000/-க்குள் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
இந்த ஆண்டில் ஸ்மார்ட்போனில் நடந்த சில வித்தியாசமான மாற்றங்கள் ஸ்மார்ட்போன் ரசிகர்களை பெருமளவு திருப்தி செய்தது. அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களையும் வாடிக்கையாளர்கள் ஏற்று கொண்டார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. இந்த கட்டுரையில் இந்த ஆண்டு அறிமுகமான ஒருசில முக்கிய ஸ்மார்ட்போன் மாற்றங்கள் குறித்து பார்ப்போம்

டூயல் கேமிரா
இந்த ஆண்டு அறிமுகமானதில் மிக முக்கியமானது டூயல் கேமிரா வசதிதான். ஒரே கேமிராவில் படம் எடுப்பதைவிட டூயல் கேமிராவில் படம் பிடிப்பது எளிமையானது மட்டுமின்றி படத்தின் தரமும் சூப்பராக இருந்ததால் இந்த வசதி 100% வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்தது. குறிப்பாக ஆப்பிள், சாம்சங், உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அறிமுகம் செய்த போன்களில் டூயல் கேமிரா வசதி இருந்தது வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.
டூயல் கேமிரா வசதி என்பது நிறுவனத்தை பொருத்து தரத்திலும் வித்தியாசம் இருந்தது. இந்நிலையில் ஐபோன் 7 பிளஸ் மாடலில் இரண்டு பின்பக்க கேமிரா அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பின்பற்றி ஹூவாய் P9 மாடலும் பின்பக்கம் மட்டுமே டூயல் கேமிராவை அறிமுகம் செய்து அசத்தியது.

ஸ்மார்ட்போனின் வித்தியாசமான மாடுலர் டிசைன்கள்
கூகுள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மாடுலர் டிசைனில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதாக கூறியிருந்தது. ஆனால் அது நிகழாமல் போகவே எல்ஜி நிறுவனம் முந்தி கொண்டது. LG G5 மாடலில் மாடுலர் டிசைனில் வெளிவந்தது. எல்.ஜி நிறுவனத்தை அடுத்து மோட்டோரோலா நிறுவனமும் தனது மோட்டோ Z சீரியஸில் மாடுலர் டிசைன் போன்களை வெளியிட்டது. மாடுலர் டிசைனின் சிறப்பு என்னவெனில் பேட்டரி, கேமிரா, சவுண்ட் பூஸ்ட் ஆகியவை அபாரமாக இருக்கும்.

டைப் சி ஆடியோ
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் கேமிரா, வீடியோ, பேட்டரி மற்றும் பிராஸசர் ஆகியவற்றில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வந்த நிலையில் திடீரென இந்த வருடம்தான் ஆடியோ டெக்னாலஜி மீதும் கவனம் செலுத்தினர்.
வழக்கமான ஆடியோ ஜேக்கிற்கு பதிலாக USB டைப் சி மாடல் ஆடியோ ஜேக் அறிமுகம் ஆனது இந்த ஆண்டுதான். மேலும் ஆப்பிள், மோட்டோரோலோ HTC போன்ற நிறுவனங்கள் தற்போது அதிநவீன டெக்னாலஜியுடன் போனை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த அதிநவீன வசதி வரும் ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது

பெஸல் லெஸ் டிஸ்ப்ளே
ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே Bezel என்ற வார்த்தை புதியதாக இருக்கும். பெஸல் லெஸ் டிஸ்ப்ளேவை கொண்டு ஸ்மார்ட்போன் உருவானது இந்த ஆண்டுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஸ்மார்ட்போனின் விளிம்புகளில் Bezel இல்லாமல் வெளிவந்த ஒருசில மாடல் ஸ்மார்ட்போன்கள் மிக அழகாக காட்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சியாமி மி மிக்ஸ் ஸ்மார்ட்போன் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இனிவரும் ஆண்டுகளில் பெஸல் லெஸ் டிஸ்ப்ளே ஒரு டிரண்ட் ஆகும் என்று கூறினால் அது மிகையாகாது

சாப்ட்வேரிலும் புதுமை
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தற்போது சாப்ட்வேரில் மிகுந்த கவனத்தை கையாண்டு வருகின்றனர். ஆண்ட்ராய்டு வகையில் ஒருசில சிரமங்கள் உபயோகிப்பாளர்களுக்கு இருப்பதை புரிந்து கொண்டு தற்போது UI டெக்னாலஜியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உபயோகிப்பாளர்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட முடியும். மேலும் கூல்பேட் வசதியும் HTC உள்பட ஒருசில நிறுவனங்களில் மாடல்களில் அறிமுகம் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications