3 முத்தான வசதிகளுடன் புதிய ஸ்மார்ட்போன்!

டிரோன் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.2 ஃபிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். அதிலும் இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது என்றால் நிச்சயம் மக்களால் அதிகம் எதிர் பார்க்கப்படும். இது 3.2 இஞ்ச் எச்ஜிவிஏ தொடுதிரை தொழில் நுட்பம் கொண்டது.
இந்த ஸ்மார்ட்போனில் 3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் வசதி கொண்ட ஏ2டிபி புளூடூத் வெர்ஷன் 2.1 வசதி கொண்டது. பிரவுசிங் வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெறலாம். ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம், டியூவல் சிம், அகன்ற தொடுதிரை என்று மூன்று முக்கிய வசதிகளை கொண்டுள்ளது இந்த டிரோன் ஸ்மார்ட்போன்.
இந்த வசதிகள் மக்கள் எதிர் பார்க்கும் அடிப்படை வசதிகள் என்று கூட சொல்லலாம். குறைந்த விலை கொண்டது இந்த டிரோன் ஸ்மார்ட்போன் என்று தகவல்கள் கூறுகின்றன. கவர்ச்சிகரமான இந்த ஸ்மார்ட்போனின் மூலம் சிறந்த வசதிகளை பெறலாம். இதன் சரியான விலையை தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications