Home
Mobile

மோட்டோ ரேஸர் vs மோட்டோ டிராய்டு ரேஸர் போன்கள் ஒப்பீட்டு அலசல்

By Super
மோட்டோ ரேஸர் vs மோட்டோ டிராய்டு ரேஸர் போன்கள் ஒப்பீட்டு அலசல்
ஒரே மாதிரியான பெயரைக் கொண்டுள்ள இந்த இரண்டு மொபைல்களும் மோட்டோரோலா நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள மொபைல்கள்.

பெயரில் மட்டும் ஒத்திருக்கும் இந்த இரண்டு மொபைல்களும் செயல்பாடுகளில் இரு துருவம் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு மொபைல்களும் வெவ்வேறு விதமான வசதிகளைக் கொடுக்கிறது. அதிலும் மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் மொபைல், இந்நிறுவனத்திற்கு அதிக அளவில் விற்பனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்த மொபைலின் வடிவத்தையும், தொழில் நுட்பத்தையும் சற்று ஞாபகப்படுத்திப் பார்க்கும் பொழுது தான் இதன் வெற்றியின் ரகசியம் புரியும்.

மோட்டோரோலா ரேசர் மொபைல் 100 கிராம் எடையுடன், 2.2 இஞ்ச் திரையையும் கொண்டுள்ளது. மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் மொபைல் 4.3 இஞ்ச் அகன்ற திரையை கொண்டது. இந்த மல்டி டச் தொழில் நுட்பத்தையும், கொரில்லா கிளாஸ் வசதியையும் கொடுக்கிறது.

மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் மொபைலின் மூலம் சிறப்பான வசதிகளைப் பெற முடியும். ஏனென்றால் இதில் ஆக்சிலரோமீட்டர் சென்சார் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார் வசதியையும் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் மொபைல் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெர்ஷன் 2.3.5 மூலம் இயங்குகிறது. இதன் 1.2 ஜிஎச்இசட் டியூவல் பிராசஸர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் எளிதாக இயங்க உதவுகிறது. ஆனால் மோட்டோரோலா ரேசர் மொபைல் சாதாரண ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டது.

ட்ராய்டு ரேசர் மொபைல் 8 மெகா பிக்ஸல் கேமராவினைக் கொண்டுள்ளது. அதோடு இந்த மொபைலில் செகன்டரி கேமராவும் உள்ளது. ஆனால் மோட்டோ ரேசர் மொபைலில் 1.23 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டது.

மோட்டோ ரேசர் மொபைலில் எல்ஐ-அயான் 710 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ட்ராய்டு ரேசர் மொபைலுக்கு கூடுதல் பவர் கொடுக்கும், எல்ஐ-அயான் 1,780 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

புதிய படைப்பான மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் மொபைல், மோட்டோரோலா ரேசர் மொபைலையும் விட சற்று கூடுதல் வசதி கொண்டது. மோட்டோரோலா ரேசர் மொபைல் ரூ.7,500 ஒட்டிய விலையிலும் மற்றும் மோட்டோரோலா ட்ராய்டு ரேசர் மொபைல் ரூ.25,000 விலையில் இருந்து 35,000 ஒட்டிய விலை வரையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X