ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்!
கண்கவரும் புதிய மொபைல்களை கொடுத்து கொண்டிருந்த மொபைல் நிறுவனங்கள், அப்படி தயாரிக்கப்படும் மொபைல்களில் புதிய ஆப்பரேடிங் சிஸ்டத்தினை அப்கிரேடு செய்யும் வசதியினையும் கொடுத்து கொண்டு வருகிறது.

இந்த அப்கிரேடு வசதியுடன் டிராய்டு ஸ்மார்ட்மொபைலை தர இருக்கிறது டிராய்டு ஸ்மார்ட்மொபைல். இந்த அப்கிரேட் வசதி டிராய்டு ஸ்மார்ட்மொபைலின் தொழில் நுட்பத்தினை இன்னும் அதிக அளவு உயர்த்தும். இதனால் அசத்தும் கூடுதல் வசதிகளையும், தகவல்களையும் வெப் பிரவுசரில் இருந்து சுலபமாக இந்த ஸ்மார்ட்மொபைலுக்கு டவுன்லோடு செய்யலாம்.

4.3 இஞ்ச் திரை கொண்ட இந்த கவர்ச்சிகரமான மொபைல் 8 மெகா பிக்ஸல் வேமராவினை கொண்டுள்ளது. இதனால் அற்புதமாக புகைப்படங்களையும், சிறந்த வீடியோ ரெக்கார்டிங்கையும் பெற முடியும். இந்த டிராய்டு ஸ்மார்ட்போனில் 660 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 280 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

இதில் இன்டர்னல் மெமரி பற்றிய கவலை இல்லை. 512எம்பி வரை இன்டர்னல் வசதியினையும், 16ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினையும் பெற முடியும்.  இத்தகைய சிறந்த வசதிகளை கொடுக்கும் இந்த சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்மொபைல், இந்த புதிய ஜின்ஜர்பிரீட் அப்கிரேட் வசதியினால் இன்னும் அதிக வசதியினையும் தரும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot