யார்டா நீ? டூகீ போன்னா சும்மாவா? 10,100mAh பேட்டரி.. 32GB ரேம்.. 2TB மெமரி.. 100MP கேமரா.. விலை ரூ.20000 தானா?
டூகீ (Doogee) நிறுவனம் புத்தம் புதிய டூகீ S200 (Doogee S200) என்ற ரஃடு ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது டூகீ நிறுவனத்தின் S சீரிஸ் வரிசையில் களமிறங்கும் டூயல் டிஸ்பிளே ரஃடு ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பவர்புல் ஆன சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தில் நிறுவனம் பேக் செய்துள்ளது. இதில் வியப்படையும் வகையில், இந்த போனில் இரண்டு டிஸ்பிளே மற்றும் 10100mAh பேட்டரியை நிறுவனம் வழங்கி அசத்தியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எல்லா விஷயங்களும் இதோ.
டூகீ S200 (Doogee S200) ஸ்மார்ட்போன் சாதனம் 6.72" இன்ச் அளவு கொண்ட FHD+ IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இதில் உள்ள இரண்டாம் டிஸ்பிளே 1.32" இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவாக போனின் பின்பக்கத்தில் வருகிறது. இது நோட்டிபிகேஷன் மற்றும் அடிப்படை அம்சங்களை காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டூகீ S200 ஸ்மார்ட்போன் (Doogee S200 Smartphone):
இந்த புதிய டூகீ S200 (Doogee S200) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 (MediaTek Dimensity 7050) சிப்செட் உடன் வருகிறது. இது 32GB ரேம் (RAM) அம்சத்துடன் வருகிறது. ஆம், சரியாக தான் படித்தீர்கள், இந்த சாதனம் 32GB வரையிலான ரேம் அம்சத்துடன் வருகிறது. இது 12GB ஒரிஜினல் ரேம் உடன் 20GB எக்ஸ்பெண்டபிள் ரேம் அம்சத்தை வழங்கியுள்ளது.
இந்த புதிய டூகீ S200 (Doogee S200 Rugged Smartphone) ஸ்மார்ட்போன் சாதனம் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஏரோ-ஸ்பேஸ் அலுமினியம் (aerospace-grade aluminum build) பில்ட் உடன் MIL-STD-810H சான்றை பெற்றுள்ளது. இது உடையவே உடையாத மிகவும் உறுதியான போன் ஆக வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 100MP AI உடன் மெயின் கேமரா அம்சம், 20MP நைட் விஷன் கேமரா, 2MP மேக்ரோ கேமரா உடன் ட்ரிபிள் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இது 4K வீடியோ குவாலிட்டி ரெக்கார்டிங் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 10,100mAh பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது. இது 33W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன், ரிவர்ஸ் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது.
டூகீ S200 ரக்டு ஸ்மார்ட்போன் (Doogee S200 Rugged Smartphone):
இந்த டூகீ S200 (Doogee S200) ஸ்மார்ட்போன் சாதனம் IP69/IP69K ரேட்டிங் உடன் வருகிறது. இந்த ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் வைஃபை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), NFC, மற்றும் ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (Glonass), கலீலியோ (Galileo), மற்றும் பெய்டூ (Beidou) ஆதரவை ஆதரிக்கிறது. இது பிங்கர்பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கிறது.
இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய Doogee S200 ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ. 28,593 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கவில்லை. ஆனால், UK மற்றும் அமெரிக்காவில் இது வாங்க கிடைக்கிறது. ஆன்லைன் மூலமாக இதை வாங்க சில வழிகளில் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








