ஓடியாங்க ஓடியாங்க! ரூ.15,000க்கு கீழ் அட்டகாச 5G ஸ்மார்ட்போன் விற்கும் பிளிப்கார்ட்.!

|

இந்தியாவில் 5G அறிமுகமாகும் என்ற தகவல் வெளியான போது ஒவ்வொரு 5ஜி ஸ்மார்ட்போனும் உச்ச விலையில் அறிமுகமானது. இந்தியாவில் விரைவில் 5ஜி என்ற தகவல் வெளியான போது மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகத் தொடங்கியது. இந்தியாவில் 5ஜி அறிமுகமாகிவிட்டது, படிப்படியாக 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களானது மலிவு விலையில் கிடைக்கத் தொடங்கிவிட்டது.

சிறந்த 5ஜி போன்கள்

சிறந்த 5ஜி போன்கள்

மலிவு விலையில் 5G போன் என்பது கையில் வைத்திருக்கும் 4ஜி போனே நன்றாகத் தான் இருக்கிறது. எதற்கு மற்றொரு புதிய போன் என்று சிந்திப்பவர்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல் புதிய 5ஜி போனை கம்மி விலையில் வாங்கலாம் என திட்டமிடுபவர்களுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். அதன்படி பிளிப்கார்ட்டில் ரூ.15,000க்கு கீழ் ஏணைய 5ஜி போன்கள் கிடைக்கிறது. இதில் சிறந்த 5ஜி போன்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Poco M4 Pro 5G

Poco M4 Pro 5G

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.15,000க்கு கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.16,999க்கு பதிலாக ரூ.12,999 என கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.

Realme 9i 5G

Realme 9i 5G

Realme 9i 5G ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.17,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் 16 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. வங்கி சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ என பல சலுகைகள் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை என டிரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY M13 5G

SAMSUNG GALAXY M13 5G

SAMSUNG GALAXY M13 5G ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் ரூ.14,889 என விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், வங்கி சலுகைகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. மாதம் ரூ.517 என்ற வீதத்திலும் இந்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.14889 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

IQOO Z6 Lite 5G

IQOO Z6 Lite 5G

IQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் ரூ.14,307 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் உடன் சார்ஜர் வழங்கப்படாது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதேபோல் இதற்கு வங்கி சலுகைகள் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஐக்யூ இசட்6 லைட் 5ஜி ஆனது 6.67 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

Infinix Note 12 5G

Infinix Note 12 5G

Infinix Note 12 5G ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

Infinix Note 12 5G ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Don't Waste Your Money: Best 5G Smartphones Available at Under Rs.15,000 in Flipkart!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X