போட்டிக்கு நாங்களும் வரலாமா? புது போன் வாங்க ரெடியா இருங்க! தேதி குறிச்ச பிரபல நிறுவனம்!
Tecno Phantom V Fold ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டெக்னோ நிறுவனம் விரைவில் Tecno Phantom V Fold போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.
மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 நிகழ்வு
ஸ்பெயினின் பார்சிலோனாவில் இந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 நிகழ்வு தொடங்குகிறது. இந்த நிகழ்வு தொடங்கிய அடுத்த நாளான பிப்ரவரி 28 ஆம் தேதி Tecno Phantom V Fold போன் வெளியிடப்படும் என டெக்னோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதன்படி Tecno Phantom V Fold போனின் வெளியீட்டுப் பக்கம் தற்போதே MWC 2023 இணையதளத்தில் நேரலையில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ SoC சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ SoC சிப்செட்
புத்தகம் போல் மடிக்கக்கூடிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. டெக்னோ நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் இது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ SoC சிப்செட் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. AnTuTu சோதனையில் 1.08 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கிறது இந்த சிப்செட். Tecno Phantom V Fold இன் வெளியீட்டுப் பக்கம் தற்போது MWC 2023 இணையதளத்தில் நேரலையில் உள்ளது.
வெளியான ஒரிஜினல் புகைப்படம்
அதேபோல் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்கள் டிப்ஸ்டர் பராஸ் குக்லானியால் மூலம் கசிந்தது. இந்த படத்தில் Tecno Phantom V Fold இன் கவர் டிஸ்ப்ளே காண்பிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் மையத்தில் பஞ்ச் ஹோல் வசதியுடன் செல்பி கேமரா வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியாவில் விரைவில் அறிமுகம்
வரவிருக்கும் டெக்னோ பாண்டம் வி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்பது வெளியான படங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை முறையாக வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.
தொடர்ந்து அறிமுகமாகும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்
ஒரே மாதிரியான ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோமே என பயனர்கள் விரக்தி அடைவதை தடுக்கும் வகையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தி அதை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அதன்படி தான் டெக்னோ நிறுவனமும் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறது.
ரோலிங் டிஸ்ப்ளே ஆதரவு
ஜிஎஸ்எம் அரீனாவின் (GSM Arena) அறிக்கையின்படி, இப்போது உலக சந்தையில் வாங்க கிடைக்கும் மற்ற அனைத்து மடிக்கக்கூடிய மொபைல் போன் (foldable mobile phone) டிவைஸ்களிலிருந்தும் இது முற்றிலும் வேறுபட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு காரணம், ரோலிங் டிஸ்ப்ளே மற்றும் ஸ்லைடிங் டிஸ்ப்ளே ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுவதே ஆகும்.

பெரிய அளவிலான டிஸ்ப்ளே
YouTube மூலம் பகிரப்பட்ட Tecno Phantom Vision V இன் வீடியோவில் இந்த சாதனத்தைப் பற்றிய தகவல்கள் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த போன் போல்டபில் நிலையில் இருந்து பெரிய டிஸ்பிளேவிற்கு மாறுவதை வீடியோ காட்டுகிறது. வெளிப்புற டிஸ்ப்ளே மெலிதான பெசல்கள் மற்றும் வளைந்த விளிம்புடன் இருப்பதும் இதில் தெரிகிறது.
டிரிபிள் ரியர் கேமரா யூனிட்
Phantom Vision V இன் பின்புறம் குவாட்-எல்இடி ஃபிளாஷ் கொண்ட டிரிபிள் கேமரா யூனிட் உடன் வருகிறது. இந்த போல்டபில் போனின் கேமரா அமைப்பின் கீழ், ஒரு சிறிய டிஸ்பிளே இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இது நோட்டிபிகேஷன், கடிகாரம், ரீமைண்டர் போன்ற ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவாக செயல்படும் போல் தெரிகிறது. இந்த சாதனம் ஒரு விண்வெளி தர டைட்டானியம் அலாய் உறையுடன் வர இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ப்ரீமியம் போன் வாங்க சரியான தேர்வு இதுவாகும்
இந்த டிவைஸை நாம் மடிந்தால், வழக்கமான, பாக்கெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோன் போல் தோன்றும். அதேபோல் இந்த டிவைஸ் அதன் டிஸ்ப்ளேவை ரோல் செய்து விரிவடையும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிஸ்ப்ளே ஏரியா நமக்கு கிடைக்கிறது. புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இந்த போன் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








