வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?

|

யாரை கேட்டாலும் ரூ..20,000 க்கு மேல் அல்லது ரூ.25,000 பட்ஜெட்டில் உள்ள 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குங்கள், அது தான் பெஸ்ட் என்று அறிவுரை கூறுகிறார்களா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ரூ,13,000-ஐ சுற்றிய சில நல்ல 5ஜி ஸ்மார்ட்போன்களும் (5G Phone) கூட இங்கே வாங்க கிடைக்கிறது.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பெரிய தொகையை செலவழிக்க விரும்பாத மக்கள்!

பெரிய தொகையை செலவழிக்க விரும்பாத மக்கள்!

நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை - இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் அறிமுகமான பின்னர் 5ஜி ஸ்மார்ட்போன்களின் மீதான தேடலும் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது!

இன்னும் இந்தியா முழுவதுமாக அறிமுகம் செய்யப்படாத 5ஜி சேவையின் ஒரு பகுதியாக ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்பதற்காக பெரிய தொகையை செலவழிக்க விரும்பாத மக்கள் ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் 5ஜி போன்களை தேடி வருகின்றன.

திடீரென ரூ.4000 க்கும்.. ரூ.5000 க்கும் விற்கப்படும் 12 Redmi போன்கள்.. இதோ முழு லிஸ்ட்!திடீரென ரூ.4000 க்கும்.. ரூ.5000 க்கும் விற்கப்படும் 12 Redmi போன்கள்.. இதோ முழு லிஸ்ட்!

டாப் 5 பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

டாப் 5 பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

அந்த தேடலில் நீங்களும் உள்ளீர்கள் என்றால்.. ரூ,13,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

இந்த பட்டியலில் உள்ள ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் ரூ.15,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வருகிறது; இருந்தாலும் கூட நீங்கள் அதையும் கருத்தில் கொள்ளலாம்!

01. மோட்டோ ஜி51 5ஜி

01. மோட்டோ ஜி51 5ஜி

இந்த பட்டியலின் முதல் இடத்தில் உள்ள Moto G51 5G ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 480+ SoC ப்ராசஸர், 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட 5,000mAh பேட்டரி, IP52 ஸ்பிளாஷ் ப்ரூப், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கிறது. பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart வழியாக இது ரூ.12,249 க்கு வாங்க கிடைக்கிறது!

1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!

02. சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

02. சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

Samsung Galaxy F23 5G ஆனது கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உடனான 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750 SoC ப்ராசஸர், பெரிய 6,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

சாம்சங்கின் இந்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கின்றன. ஒன்று 4GB ரேம், இன்னொன்று 6GB RAM. இவைகள் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கின்றன. இந்த இரண்டுமே 128GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகின்றன.

03. ரெட்மி 11 ப்ரைம் 5ஜி

03. ரெட்மி 11 ப்ரைம் 5ஜி

சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆன Redmi 11 Prime 5G மாடல் ஆனது 6.58 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், டைமென்சிட்டி 700 சிபியு போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

ரெட்மி 11 ப்ரைம் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள அதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?

04. போக்கோ எம்4 5ஜி

04. போக்கோ எம்4 5ஜி

ரூ.13,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் என்கிற பட்டியலில் கடைசியாக உள்ளது MediaTek Dimensity 700 SoC மூலம் இயக்கப்படும் Poco M4 5G மாடல் ஆகும்.

இது 5,000mAh பேட்டரி, 50MP டூயல் ரியர் செட்டப், 6.58-இன்ச் அளவிலான 90Hz டிஸ்ப்ளே மற்றும் ஏழு 5G பேண்டுகளுக்கான ஆதரவு போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.13,139 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.15,139 க்கும் வாங்க கிடைக்கிறது.

ரூ.15,000 பட்ஜெட்டில் வரும்

ரூ.15,000 பட்ஜெட்டில் வரும் "அந்த" போன்!

இக்கட்டுரையின் தொடக்கத்தில் ரூ.15,000 க்கு வாங்க கிடைக்கும் ஒரு 5ஜி ஸ்மார்ட்ப்போனை குறிப்பிட்டோம் அல்லவா? அது ஒப்போ ஏ74 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 480 SoC ப்ராசஸர், 6.5-இன்ச் அளவிலான 90Hz டிஸ்ப்ளே, 48MP ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப், 18W சார்ஜிங் சப்போர்ட் உடனான 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இது சிங்கிள் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வருகிறது. இதன் விலை ரூ.14,990 ஆகும்!

Best Mobiles in India

English summary
Do you think Rs 20000 is a big budget for a 5g phone check out these phones priced around rs 13000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X