Home
Mobile

அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?

POCO X5 Pro ஸ்மார்ட்போன் குறித்த தகவல் கடந்த சில நாட்களாவே தொடர்ந்து உலா வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஹர்திக் பாண்டியா பயன்படுத்தும் போன்

ஹர்திக் பாண்டியா பயன்படுத்தும் போன், பதான் திரைப்படத்திற்கு நடுவில் தோன்றிய போன் விளம்பரம் என கடந்த சில நாட்களாவே POCO X5 Pro ஸ்மார்ட்போன் குறித்த தகவல் உலா வந்துக் கொண்டிருக்கிறது.

அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி!

POCO X5 Pro அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி

POCO X5 Pro ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டுத் தேதி பதான் திரைப்படத்தின் இன்டெர்வல் பிளாக் இல் விளம்பரமாக காண்பிக்கப்பட்டது. இந்த புகைப்படம் ட்விட்டரில் பெரிதளவு வைரலானது. இந்த நிலையில் நிறுவனம் டீஸர் மூலம் போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

பிப்ரவரி 6 அறிமுகம்

POCO X5 Pro ஸ்மார்ட்போனானது பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் நிறுவனம் இந்த போனை பிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யப்படும் என்பதையு்ம உறுதி செய்திருக்கிறது. அடுத்த வாரம் இந்த போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ரெட்மி நோட் 12 ஸ்பீட் எடிஷனின் மறு பதிப்பா?

POCO X4 Pro இன் வாரிசாக POCO X5 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 ஸ்பீட் எடிஷனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் எனவும் வதந்தித் தகவல்கள் பரவுகின்றன.

அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி!

பிளிப்கார்ட் விற்பனை

இந்த ஸ்மார்ட்போனுக்கு என போக்கோ மற்றும் பிளிப்கார்ட் இணையதளத்தில் பிரத்யேகமாக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

POCO X5 Pro விலை

POCO X5 Pro விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.21,000 மற்றும் ரூ.23,000 வரம்பில் இருக்கும் என கூறப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட மூன்று வேரியண்ட்களில் இது அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா கையில் இருந்த போன்

சில தினங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா இந்த மொபைல் போனை பயன்படுத்தும் புகைப்படம் வெளியானது. POCO X5 Pro 5G அறிமுகமாவதற்கு முன்னதாவே இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அதை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார். அதேபோல் POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்கை "லீக்" செய்தவர் ஹர்திக் பாண்டியா என்றும் குறிப்பிடலாம்.

உறுதி செய்யப்பட்ட புது போன் அம்சங்கள்

ஹர்திக் பாண்டியா மூலம் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் உறுதிப்படுத்தப்பட்டது.

டிரிபிள் ரியர் கேமரா

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போன் மஞ்சள் நிற மாறுபாட்டில் இருக்கும் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிராண்டின் ஐகானிக் டூயல் டோன் ரியர் டிசைன் மற்றும் பெரிய கேமரா மாட்யூல் என ஸ்மார்ட்போனின் பின்புற மேற்பகுதி முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் பவர் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காண முடிகிறது. இந்த லீக்கில் ஸ்மார்ட்போனின் முன்பகுதி எதுவும் தென்படவில்லை.

POCO X5 Pro 5G சிறப்பம்சங்கள்

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 12 ஸ்பீடு பதிப்பின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்பு ரெட்மி நோட் 12 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி இருக்கும்பட்சத்தில் இதன் அம்சங்களையும் கணித்துவிடலாம்.

அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி!

ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் ஆதரவு

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வெளியாகலாம். ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 108 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்றும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோகால் ஆதரவுக்கு என 16 எம்பி கேமரா இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த பேட்டரி ஆயுள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 5500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படலாம். யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவு இதில் இருக்கும். அதேபோல் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you Remember that Hardik Pandya phone? Poco X5 Pro 5G Launch Date Confirmed! Is this the price?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X