ஸ்மார்ட்போனில் ஆங்காங்கே சின்ன சின்ன துளைகள் இருப்பதற்கான காரணமென்ன.?

|

ஐபோன்களை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென்று எங்கும் ஒரு கூட்டத்திற்கு நிகராக ஐபோன்களை வெறுக்கும், விமர்சித்து தள்ளும் ஒரு கூட்டமும் உண்டு. அந்த இரண்டு பிரிவினர்களுக்குமே தீனி போடும் ஒரு தொகுப்பே இது.

அதாவது தோற்றம், நம்பமுடியாத அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு காரணமாக மக்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தை கிளப்பும் ஐபோன்களை மில்லியன் கணக்கானவர்கள் வைத்திருக்கும் போதிலும் கூட ஒரு ஐபோனின் கேமரா மற்றும் பிளாஷ் ஆகியவற்றிற்கு இடையே ஒரு சிறிய துளை ஏன் இருக்கிறது என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.

ஐபோன்களில் மட்டுமல்ல பல கருவிகளில் காணப்படும், மறைந்திருக்கும் மிக அற்புதமான அம்சங்களில் ஒன்றான அந்த சிறிய துளையின் காரணம்.? எந்த துளை அல்லது எங்கிருக்கும் துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது.? என்பதை பற்றிய விளக்கவுரையை இந்த தொகுப்பு.

முன் கேமராவுக்கு அருகில்

முன் கேமராவுக்கு அருகில்

இந்த சிறிய துளையானது பொதுவாக ஐபோன் பின்புற பக்கத்தில் உள்ளது. ஆனால் சில தொலைபேசிகளில் அது முன் பக்கமாகவும் அமைந்துள்ளது, அதாவது முன் கேமராவுக்கு அருகில் உள்ளது. இந்த சிறிய துளையானது "நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்" என்று அழைக்கப்படுகிறது. சரி ஒரு ஸ்மார்ட்போனில் இதன் வேலைதான் என்ன.?

நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம்

நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம்

நீங்கள் ஒரு முழுயான சத்தம் நிறைந்த பகுதியில் இருக்கும் போது உங்கள் ஐபோனுக்கு ஒரு அழைப்பு வரலாம். எடுத்து பேசினாலும் கூட மறுபக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்த சப்தமும் கேட்காது அல்லவா.?? ஆனால் சாதனத்தில் ஒரு நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் இருப்பின் சிறப்பு ஆடியோ அமைப்பின் காரணமாக மறுபக்கம் உங்கள் குரல் நல்ல முறையில் கேட்கும்.

இடது பக்கத்தில்

இடது பக்கத்தில்

ஐபோனில் மூன்று ஒலிவாங்கிகள் உள்ளன. ஒரு முதன்மை ஒலிவாங்கி மற்றும் இரண்டு இரண்டாம் நிலை ஒலிவாங்கிகள். முதன்மை மைக் ஆனது ஐபோனின் இடது பக்கத்தில் தொலைபேசியின் கீழே அமைந்திருக்கும் ஒரு ஒலிவாங்கி ஆகும். அதன் முதன்மையான வேலையே தொலைபேசி அழைப்புகள் வரும்பொழுது ஒரு சத்தமான சூழலில் நீங்கள் அழைப்புகளை மேற்கொண்டாலும் கூட புறம்பான, தேவையற்ற ஒலியை குறைப்பது தான்.

இரண்டாம் நிலை ஒலிவாங்கி

இரண்டாம் நிலை ஒலிவாங்கி

ஐபோன் 4 -ன் பின்புறம் (சில நேரங்களில் முன்) உள்ள இரண்டாம் நிலை ஒலிவாங்கிகளின் முக்கிய நோக்கம் என்னவென்று பார்த்தால் ஆம்பியண்ட் ரூம் நாய்ஸ்தனை (சுற்றுப்புற அறை சத்தம்) எடுத்துக் கொள்வது தான்.

சுற்றியுள்ள இடைவெளிகளில்

சுற்றியுள்ள இடைவெளிகளில்

ஏனெனில் இது முதன்மை மைக்கைப் பொறுத்தவரை தொலைபேசியின் எதிர்முனையில் அமர்ந்து இருப்பதால், அது உங்களுக்குச் சுற்றியுள்ள இடைவெளிகளில் உள்ள ஒலி மற்றும் இரைச்சல் ஆகியவற்றை சேகரிக்குமே தவிர உங்கள் குரலை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது

மேலே உள்ள இரண்டாம் மைக்.?

மேலே உள்ள இரண்டாம் மைக்.?

ஹெட்ஸெட் ஜாக் அருகே உள்ள இரண்டாம் மைக் ஆனது முதன்மை மைக்ரோபோனில் லவுட்ஸ்பீக்கர் செயல்படுத்தப்படும்பொழுது செயலில் இறங்கும். ஒலிபெருக்கி இயல்பில் இருக்கும்போது முதன்மை மைக் செயல்படாது.

நாய்ஸ் கேன்சலிங் சர்க்யூட்

நாய்ஸ் கேன்சலிங் சர்க்யூட்

இரண்டாம் நிலை மைக்ரோபோன் ஆனது முதன்மை மைக்கில் இருந்து சிக்னலைக் கழிப்பதன் மூலம் ஐபோனில் நாய்ஸ் கேன்சலிங் சுற்றமைப்பு வேலை செய்கிறது. முதன்மை மைக் ஆனது ஆம்பியண்ட் நாய்ஸ் மற்றும் குரலை பிக் செய்யும். இரண்டாம் நிலை மேக் ஆனது ஆம்பியண்ட் நாய்ஸ்தனை மட்டுமே பிக் செய்யும். இந்த செயலாக்கத்திற்குப் பிறகு, இதன் விளைவாக சிக்னல் ஆனது உங்கள் குரலுக்கு முதன்மை அளித்து இதர சப்தங்களுக்கு சிறிய அறை மட்டுமே அளிக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Do You Know, Why There Is A Tiny Hole In Between The Camera And Flash on Many Phones? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X