Home
Mobile

அசத்தலான நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்: முன்பதிவு எப்போது முதல் தெரியுமா?

எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த ஏப்ரலில் நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஜி20

நோக்கியா ஜி20

அதன்படி நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைத்தளத்தில் வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யமுடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலும் அமேசான் தளத்தில் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. அதன்படி நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி

மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி

இந்த புதிய நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரே

இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்ட் பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது.

5050 எம்ஏஎச் பேட்டரி

5050 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

 எல்டிஇ, வைஃபை 802.1

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Do you know when to book Nokia G20 smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X