இங்க நான் தான் கிங்கு.. SAMSUNG-க்கு சங்கு.. AI மறுஉருவம் Google Pixel 8a.. ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளுது!
சாம்சங் எஸ்24 அல்ட்ராவில் கொடுக்கப்பட்ட சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search), லைவ் டிரான்ஸ்லேட் (Live Translate) போன்ற பீச்சர்கள மட்டுமல்லாமல், அதையே தூக்கி சாப்பிடும் விதமான ஏஐ பீச்சர்களுடன் கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) வருகிறது.
இந்த போனின் ப்ரொமோ வீடியோ வெளியாகி ஸ்மார்ட்போன் மார்கெட்டையே மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. சர்க்கிள் டூ சர்ச், லைவ் டிரான்ஸ்லேட், பெஸ்ட் டேக் (Best Take) மற்றும் ஆடியோ மேஜிக் எரேசர் (Audio Magic Eraser) போன்ற பீச்சர்கள் அந்த ப்ரொமோ வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.

சாம்சங் எஸ்24 அல்ட்ராவில் வந்த சர்க்கிள் டூ சர்ச் மற்றும் லைவ் டிரான்ஸ்லேட் பீச்சர்களுக்கு அறிமுகம் தேவைப்படாது. ஆனால், இப்போது கூகுள் பிக்சல் 8ஏ மாடலில் வர இருக்கும் பெஸ்ட் டேக் மற்றும் ஆடியோ மேஜிக் எரேசர் பீச்சர்களை பற்றி சொல்லியாக வேண்டும். ஏனென்றால், 2 பீச்சர்களும் தட்டித் தூக்கும்படி இருக்கின்றன.
பெஸ்ட் டேக் பீச்சரானது, நீங்கள் போட்டோக்களை எடுத்த பிறகு முக பாவங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி இல்லையென்றால், அதற்கு முந்தைய ஃபிரேம்களில் இருக்கும் பெஸ்ட் டேக்குகளை நீங்கள் தேர்ந்தெடுத்து, அதை போட்டோவாக சேமித்து கொள்ளலாம். ஆகவே, நொடியில் ஏஐ மூலம் எடிட் செய்து போட்டக்களை பெற முடியும்.
அதேபோல ஆடியோ மேஜிக் எரேசர் பீச்சரானது, நீங்கள் வீடியோ எடுக்கும்போது, பேக்கிரவுண்ட நாய்ஸ்களை ஏஐ மூலம் கட் செய்து கொள்ளலாம். தேவைப்படும் ஆடியோவை மட்டுமே ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். யூடியூபர்களுக்கு வீடியோ எடிட் செய்யாமலேயே பக்கா அவுட்புட் கொடுக்கக்கூடிய பீச்சராக இது மாறப் போகிறது.

இந்த ஏஐ பீச்சர்கள் மட்டுமே அந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. வரும் மே 14ஆம் தேதியில் தொடங்க இருக்கும் கூகுள் ஐ/ஓ 2024 (Google I/O) நிகழ்வில் இந்த போன் வெளியாக இருக்கிறது. ஆகவே, மற்ற பீச்சர்கள் வரும் நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது, இந்த போனின் கசிந்த மற்ற பீச்சர்களை பார்ப்போம்.
கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் (Google Pixel 8a Specifications): இந்த போனில் 6.1 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி எச்டிஆர் (OLED HDR) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட கூகுள் டென்சர் ஜி 3 (Google Tensor G3) சிப்செட் வருகிறது. 7 வருட அப்டேட்கள் கொடுக்கப்படுகிறது.
டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்787 (Sony IMX787) சென்சாருடன் 64 எம்பி ரியர் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சாருடன் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிடி (Quad PD) மற்றும் குவாட் பயர் (Quad Bayer), பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் உள்ளது.
சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சாருடன் 13 எம்பி செல்பீ வருகிறது. IP67 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. 20W வயர்டு சார்ஜிங் (Wired Charging) கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. 7.5W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. அப்சிடியன் பிளாக், மின்ட் கிரீன், போர்சலேன் பீச் மற்றும் பே ப்ளூ கலர்கள் கொண்டிருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,390ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,810ஆகவும் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கூகுள் ஐ/ஓ 2024 (Google I/O) நிகழ்வில் இந்த போனின் முழு பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்போதே, அந்த போனுக்கு எதிர்பார்ப்பு எகிறிவிட்டது என்பதே உண்மை


Click it and Unblock the Notifications