விட்றாதீங்க.. சர்ர்னு விலை குறைந்த லேட்டஸ்ட் OnePlus 5G போன்.. Amazon Summer Sale-ல் மிஸ் பண்ண கூடாத ஆஃபர்!
அமேசானின் கிரேட் சம்மர் விற்பனையின் (Amazon Great Summer Sale) போது, இந்தியாவில் அறிமுகமாகி முழுதாக 1 ஆண்டு கூட நிறைவு செய்யாத லேட்டஸ்ட் ஒன்பிளஸ் (OnePlus) 5ஜிஸ்மார்ட்போன் ஒன்றின் மீது பெரிய தள்ளுபடி (Massive Discount) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் இங்கே பேசுவது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்தியாவில் ரூ.31,999 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் 10ஆர் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? ஆபர் விலைக்கு பிறகும் கூட இதை நம்பி வாங்கலாமா? இதற்கு பதிலாக வேறென்ன மாடல்களை கருத்தில் கொள்ளலாம்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 10ஆர் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? அமேசான் பக்கத்தின்படி, கிரேட் சம்மர் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த சலுகை விலை, ஒன்பிளஸ் 10ஆர் மீதான வங்கி சலுகையை (Bank Offer) உள்ளடக்கியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நீங்களொரு அமேசான் ப்ரைம் மெம்பராக (Amazon Prime Member) இருக்கும் பட்சத்தில், ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி மீதான இந்த சலுகையை ஒரு நாள் முன்னதாகவே அணுக முடியும். அதாவது மே 3 ஆம் தேதியே அணுகி முடியும். அமேசான் நிறுவனம் இதை எர்லி அக்செஸ் (Early Access) என்கிறது.
ஆபர் விலையான ரூ.29,999 க்கு ஒன்பிளஸ் 10ஆர் வொர்த்-ஆ? ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால்.. ஒன்பிளஸ் 10ஆர் ஆனது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற, விரைவான செயல்திறனை வழங்கும் ஒரு நல்ல 5ஜி போனாகும்; கூடவே ஒரு நல்ல கேமிங் ஸ்மார்ட்போனும் (Gaming Smartphone) கூட!
கவனிக்கப்படவேண்டிய மற்ற அம்சங்கள்: இது ஏற்கனவே 5ஜி ஆதரவுடன் வருகிறது என்பதால், 5ஜி நெட்வொர்க்கை பெறுவதற்காக இதற்கு எந்த அப்டேட்டும் தேவைப்படாது. கேமராக்களை பொறுத்தவரை, நலன் லைட்டிங்கின் கீழ் எடுக்கப்படும் போட்டோக்களில் எந்த குறையும் சொல்ல முடியாது; அதற்காக இதை "பெஸ்ட் கேமரா போன்" என்று கூறிவிட முடியாது.
இது 80W ஃபாஸ்ட் சர்ஜிங்கிற்கான ஆதரவுடனான 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. ஆக பேட்டரி லைஃப் பற்றிய எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது மிகவும் சீரான மற்றும் சுத்தமான மற்றும் ப்ளோட்வேர் (Bloatware) இல்லாத யூஸர் இன்டர்பேஸை (User Interface) உறுதிசெய்கிறது.
டிஸ்பிளேயிலும் எந்த குறையும் சொல்லிவிட முடியாது. இது 6.7-இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்கிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவுடன் (120Hz Refresh Rate Support) வருகிறது. இது ஸ்டாண்டர்ட் 60ஹெர்ட்ஸ் டிஸ்பிளேக்களை விட மென்மையான ஸ்க்ரோலிங் அனுபவத்தை வழங்குகிறது.
இதற்கு பதிலாக வேறென்ன மாடல்களை கருத்தில் கொள்ளலாம்? ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி-க்கு சரியான மற்றும் சரிக்கு சமமான ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன் (Alternative Smartphone) என்றால் அது கூகுள் பிக்சல் 6ஏ (Google Pixel 6a) ஆகத்தான் இருக்கும். தற்போது இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








