ரூ.10,000 ப்ரைஸ் கட் போதாதுனு எக்ஸ்ட்ரா ரூ.7000 டிஸ்கவுண்ட்.. இந்த iPhone-ஐ வாங்க Amazon-ல் கூட்டம் அள்ளுது!
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஆக ஐபோன் 17 (iPhone 17) அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, லாஸ்ட் ஜெனரேஷன் மாடலான ஐபோன் 16 (iPhone 16) ஆனது ரூ.10,000 விலை குறைப்பை பெற்றது. இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ஐபோன் 16 மாடலின் ஆரம்ப விலை ரூ.69,999 ஆக குறைந்தது.
தற்போது ஐபோன் 16 மாடலின் விலை இன்னும் குறைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்திற்கு செல்வதன் மூலம் ஐபோன் 16 மாடலின் (எந்தவொரு கலர் ஆப்ஷனின், 128 ஜிபி வேரியண்ட்டின் மீதும்) சுமார் ரூ.7,000 சேமிக்க முடியும்.

எனவே நீங்கள் ஒரு புதிய ஐபோன் 16 மாடலை வாங்குவதை கருத்தில் கொண்டிருந்தால், சரியான நேரத்திற்காக காத்திருந்தால், இதுதான் அந்த நேரம். நீங்கள் இப்போது அமேசானுக்கு சென்றால், ஆப்பிள் ஐபோன் 16 ஆனது முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.10,000 விலை குறைப்போடு சேர்த்து கூடுதலாக ரூ.3,000 விலை குறைந்து ரூ.66,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ அல்லது வேறு எந்த பேங்க் கார்ட்டையும் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 வரை சேமிக்கலாம். இப்படியாக ஐபோன் 16 மாடலின் இறுதி ஆபர் விலையை ரூ.62,900 ஆக குறைக முடியும். உண்மையிலேயே இதுவொரு நல்ல டீல் ஆகும். மேலும் மாதத்திற்கு ரூ.11,150 முதல் தொடங்கும் (6 மாதங்களுக்கு) நோ-காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
செயலாக்க கட்டணம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் பேங்க் கார்ட்டால் விதிக்கப்படும் பிற கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். ஐபோன் 16 மாடலின் விலையை மேலும் குறைக்க, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யலாம். இதன் கீழ் ரூ.58,050 (அதிகபட்சம்) என்கிற பெஸ்ட் ட்ரேட்-இன் வேல்யூவை பெறலாம்
ஐபோன் 16 முக்கிய அம்சங்கள்:
- 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- 60Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 8ஜிபி ரேம்
- ஆப்பிள் ஏ18 சிப்செட்
- ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவு
- ஐஓஎஸ் 26
- ஐபோன் 15 உடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப்
- 48எம்பி ஃப்யூஷன் கேமரா + 12MP அல்ட்ராவைடு சென்சார்
- 12MP செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
புதிய ஐபோன் 17 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
புதிய ஐபோன் ஏர் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
புதிய ஐபோன் 17 ப்ரோ ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








