Home
Mobile

Flipkart-ல் ஆர்டர் மழை.. ஜூன் 17 வரை Mega June Bonanza Sale.. மொபைல்கள் மீது முரட்டு ஆபர்.. இதோ பெஸ்ட் டீல்ஸ்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது ஜூன் 13 - 19 ஆம் தேதி வரை நீடிக்கும் சிறப்பு விற்பனை ஒன்றை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் மெகா ஜூன் போனான்ஸா சேல் என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனையின் போது ​​பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். ஒருவேளை புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால் அதை செய்வதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும். பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின்கீழ் பல போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைத்தாலும், அவைகளில் கவனிக்கப்பட வேண்டிய டாப் 5 மொபைல் ஆபர்களின் பட்டியல் இதோ:

1. ஐபோன் 15 (iPhone 15): ஐபோன் 15 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 15 மாடலின் அசல் விலை ரூ.79,900-ல் தொடங்குகிறது. ஆனால் பிளிப்கார்ட் மெகா ஜூன் போனான்ஸா விற்பனையின் போது இது 19% நேரடி தள்ளுபடிக்கு பின்னர் ரூ.63,999 க்கு வாங்க முடியும். இது தவிர பல வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கறது. இதன்மூலம் ஐபோன் 15-ன் இறுதி ஆபர் விலையை இன்னும் குறைக்கலாம்.

Flipkart-ல் ஆர்டர் மழை.. ஜூன் 17 வரை Mega June Bonanza Sale!

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 15 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஏ16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.கேமராக்களை பொறுத்தவரை 48 மெகாபிக்சல் மெயின் கேமரா + 12 மெகாபிக்சல் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில், 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

2. ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12x 5G): இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி ரூ.17,999 ஆகும். ஆனால் தற்போது இது எந்த வங்கி சலுகைகளும் இல்லாமல் ரூ.12,999 என்கிற சிறப்பு விலையில் வாங்க கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் பெறலாம்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.72 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளது. டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீகேமரா உள்ளது.

3. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): இந்த ஸ்மார்ட்போன் தற்போது 23% நேரடி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் இந்த போனின் விலை ரூ.20,999 இல் இருந்து ரூ.15,999 ஆக குறைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும்கிடைக்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இந்த போன் 6.67 இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் டைமன்சிட்டி 7050 சிப்செட் உடன் வருகிறது. இதில் 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

4. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த போனின் அசல் விலை ரூ.36,999ஆகும். நேரடி தள்ளுபடி தவிர்த்து எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயனர்கள் நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.2,000 வங்கிச் சலுகையையும் பெறலாம்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது. கேமராவைப் பொறுத்தவரை, இது 13 மெகாபிக்சல் மற்றும் 10 மெகாபிக்சல் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோக்களுக்கான 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

5. விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): தற்போது இந்த ஸ்மார்ட்போன் 22% நேரடி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது போனின் விலை ரூ.17,499 இல் இருந்து ரூ.13,499 ஆக குறைந்துள்ளது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதலாக 1,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இந்த போன் 6.72 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, பெரிய 6,000mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை இதில் 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

Best Mobiles in India

English summary
Do Not Miss this 5 Best Smartphone Discount Offer in Flipkart Mega June Bonanza Sale Until June 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X