Home
Mobile

இதுவரை இல்லாத ஆஃபர் விலையில் 2 Samsung போன்கள்.. கண்ண மூடிக்கிட்டு ஆர்டர் போடலாம்.. ஏன்னா?

அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட்டின் (Flipkart) கோடைகால சிறப்பு விற்பனையில் (Summer Sale) வெவ்வேறு விலைகளின் கீழ் வாங்க கிடைக்கும் 2 சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்கள் மீது இதுவரை இல்லாத ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்கள்? என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

அதென்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) மற்றும் சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) மாடல்களை பற்றித்தான். இந்த இரண்டுமே, நடந்துகொண்டிருக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனையின் போது பெரும் விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

இதுவரை இல்லாத ஆஃபர் விலையில் 2 Samsung போன்கள்!

ஒரு நல்ல சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்றாலும் சரி அல்லது ஒரு நல்ல 5ஜி போனை வாங்க நினைத்தாலும் சரி.. இந்த இரண்டில் ஒன்றை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். ஏன் என்பதற்கான காரணங்களை பார்க்கும் முன், இவ்விரு போன்கள் மீதும் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை பற்றி பார்த்துவிடலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி மீதான ஆஃபர்கள்: இது அமேசான் கிரேட் சம்மர் சேலின் (Amazon Great Summer Sale) போது ரூ.14,990 என்கிற அசல் விலைக்கு பதிலாக ரூ.13,000 க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். இது ரூ.1000 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.13,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் எச்டிஎப்சி பேங்க் கார்டுகளை (HDFC Bank Cards) பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை (Final Price) ரூ.12,490 ஆக குறைக்க முடியும். பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி போன் தேடுபவர்களுக்கு உண்மையிலேயே இதுவொரு நல்ல டீல் தான்!

சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ 5ஜி மீதான ஆஃபர்கள்: இது பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் (Flipkart Big Saving Days Sale) ரூ.31,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த போனின் அசல் விலை ரூ.49,999 ஆகும். இந்த ஆஃபர் - ஒரு நல்ல மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்!

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனை ஏன் நம்பி வாங்கலாம்? ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் பல பிரபலமான போன்களில் ஏதாவது ஒரு டிப்பார்ட்மென்ட் தான் அட்டகாசமாக இருக்கும். ஆனால் இந்த போன் நல்ல செயல்திறன், கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம், பெரிய 6000mAh பேட்டரி, எல்சிடி டிஸ்பிளே என கிட்டத்தட்ட எல்லா டிப்பார்ட்மென்ட்டிலும் நேர்மையான அம்சங்களை வழங்குகிறது.

சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ 5ஜி போனை ஏன் நம்பி வாங்கலாம்? மெருகூட்டப்பட்ட சாஃப்ட்வேர், துடிப்பான அமோஎல்இடி டிஸ்பிளே, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், நல்ல பேட்டரி லைஃப், நல்ல ஆட்டோஃபோகஸ் உடனான கேமரா செட்டப் என.. சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ 5ஜி போனை ஏன் நம்பி வாங்க பல காரணங்களை முன்வைக்கலாம்.

இந்த 2 போன்களையும் ஏன் வாங்காமல் தவிர்க்கலாம்? இந்த இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களுமே சார்ஜருடன் வரவில்லை. அதாவது உங்கள் தேவைக்கு ஏற்ப ஒரு ஃபாஸ்ட் சார்ஜரை (Fast Charger) வாங்க வேண்டுமென்றால், நீங்கள் அதை தனியாக பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Miss these Offers on 2 Best Samsung 5G Phones in Amazon and Flipkart Summer Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X