Home
Mobile

பிப்.14 ஸ்பெஷல்.. போட்டு தாக்கும் POCO.. 2 பட்ஜெட் மாடல்கள், 2 மிட்ரேன்ஜ் மாடல்கள் மீது பலே ஆபர்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் நடக்கும் 2025 காதலர் தின சிறப்பு விற்பனையில் (2025 Valentines Day Sale) போக்கோ (POCO) நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் தன் பங்கிற்கு, பட்ஜெட் முதல் பிரீமியம் பிரிவின்கீழ் வரும் பல போக்கோ போன்கள் மீது பலே ஆபர்களை அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன போக்கோ ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? போக்கோ ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன? இதோ விவரங்கள்:

POCO: 2 பட்ஜெட் மாடல்கள், 2 மிட்ரேன்ஜ் மாடல்கள் மீது பலே ஆபர்!

போக்கோ ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: போக்கோ எக்ஸ்7 5ஜி (Poco X7 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,999 க்கும், போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (Poco X7 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 க்கும் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுக விலைகளை பொறுத்தவரை முறையே ரூ. 21,999 மற்றும் ரூ.27,999 ஆகும்

இதேபோல், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எம்6 பிளஸ் (Poco M6 Plus) ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.10,249 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.13,499 ஆகும். மேலும் கடந்த டிசம்பர் 2024 இல் அறிமுகமான போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது

போக்கோ எக்ஸ்7 சீரீஸ் தள்ளுபடிகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ (SBI) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி தங்கள் பரிவர்த்தனைகளை முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. போக்கோ எம்6 பிளஸ் 5ஜி மற்றும் போக்கோ எம்7 ப்ரோ மீதான தள்ளுபடியை பெற எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி (HDFC) வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்க வேண்டும்.

பிளிப்கார்ட் வேலடைன்ஸ் டே சேல் 2025-ன் கீழ் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன? ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16): ரூ.67,900 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infixnix GT 20 Pro): ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது

ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது

சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus): ரூ.23,499 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus): ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Miss These Offer on 4 POCO 5G Phones in Flipkart Valentines Day Sale 2025 Till February 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X