அவசரப்பட்டு வாங்கிட்டு வருத்தப்படாதீங்க.. 9000mAh பேட்டரி புது OnePlus மாடலுக்கு பதிலாக 6 வெயிட்டான ஆப்ஷன்ஸ்!
9000எம்ஏஎச் பேட்டரி உடன் லேட்டஸ்ட் ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (ஏப்ரல்.9) தொடங்கியது. இது ஒட்டுமொத்த 2026 ஆம் ஆண்டுக்கான - ஒரு வலுவான மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக உள்ளது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் "இந்த பிரிவில்" இது மட்டுமே பெஸ்ட் ஆப்ஷன் அல்ல!
ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனுக்கு முன்பாகவே.. பல ஸ்மார்ட்போன்கள் "இதே விலைக்கு" இன்னும் சிறந்த செயல்திறன், பிரகாசமான டிஸ்பிளே, பெரிய பேட்டரி மற்றும் மேம்பட்ட கேமராக்களை வழங்குகின்றன. ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் நோர்ட் 6-க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற தேடலில், சந்தேகத்தில் அல்லது குழப்பத்தில் இருந்தால்.. நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டிய 6 ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் இதோ:

1. நத்திங் போன் 4ஏ ப்ரோ (விலை ரூ.38,999): நத்திங் போன் 4ஏ ப்ரோ தனித்துவமான எல்இடி டிசைன் மற்றும் பிரீமியம் அலுமினியம் பில்ட் உடன் வருகிறது. 144ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப் மற்றும் திறன்மிக்க ட்ரிபிள் கேமரா செட்டப் - இதை ஒரு சமநிலையான ஸ்மார்ட்போனாக மாற்றுகிறது. நீங்கள் ஸ்டைலான லுக் உடன் சேர்த்து பெஸ்ட் ஆல்-ரவுண்ட் பெர்பார்மென்ஸை விரும்பினால், 2026-ல் ஒன்பிளஸ் நோர்ட் 6-ஐ விட இது சிறந்த தேர்வாகும்.
2. போக்கோ எக்ஸ்8 ப்ரோ (விலை ரூ.32,999): போக்கோ எக்ஸ்8 ப்ரோ பெர்பார்மென்ஸ் மற்றும் பேட்டரி லைஃப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறது. டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் மற்றும் 6500mAh பேட்டரியுடன், இது சிறந்த கேமிங் செயல்திறனையும் வழங்குகிறது. பிரகாசமான அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் வேகமான ஸ்டோரேஜுடன், 2026-ல் புதிதாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 6-ஐ விட பவர் யூசர்களுக்கு இது வலுவான மாற்று விருப்பமாகும்.
3. ரியல்மி ஜிடி 7 (விலை ரூ.36,999): ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் டைமென்சிட்டி 9400இ சிப்செட் மற்றும் மேம்பட்ட கூலிங் சிஸ்டம் உடன் ஃப்ளாக்ஷிப்-லெவல் செயல்திறனை கொண்டு வருகிறது. அட்டகாசமான எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 7000mAh பெரிய பேட்டரி - இதை ஹெவி யூசர்களுக்கு ஏற்றதாக்குகிறது. ஸ்பீட் மற்றும் நீண்ட கால பயன்பாட்டை முன்னுரிமைப்படுத்துபவர்களுக்கு, 2026-ல் ஒன்பிளஸ் நோர்ட் 6-ஐ விட இது எளிதாக ஒருபடி மேலே நிற்கிறது.
4. ஒப்போ ரெனோ 15சி (விலை ரூ.37,999): ஒப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்லிம் டிசைன் மற்றும் நம்பகமான கேமராக்களை விரும்பும் பயனர்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிம் பாடி, வலுவான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 ப்ராசஸர் மற்றும் திறன்மிக்க டெலிஃபோட்டோ லென்ஸுடன், இது தனித்து நிற்கிறது. தினசரி பயன்பாட்டில் சமநிலையான தேர்வுக்காக, 2026-ல் ஒன்பிளஸ் நோர்ட் 6-ஐ விட இது புத்திசாலித்தனமான தேர்வாகும்.
5. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ( விலை ரூ.35,499): ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 200எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் உறுதியான பில்ட் உடன் வருகிறது. பிரகாசமான அமோஎல்இடி டிஸ்பிளே, சிறந்த செயல்திறன் மற்றும் பெரிய பேட்டரி இதை மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக்குகிறது. கேமரா மற்றும் நீடித்த தன்மையில் கவனம் செலுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு, 2026-ல் ஒன்பிளஸ் நோர்ட் 6-ஐ விட இது சிறந்த தேர்வாக இருக்கும்.
6. கூகுள் பிக்சல் 9ஏ (விலை ரூ. 39,999): கடந்த ஆண்டு அறிமுகமான கூகுள் பிக்சல் 9ஏ ஆனது க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு அனுபவம், சக்திவாய்ந்த ஏஐ போட்டோகிராஃபி மற்றும் நீண்ட கால சாஃப்ட்வேர் ஆதரவை வழங்குகிறது. இதெல்லாம் சேர்ந்து இதை ஒரு நம்பகமான விருப்பமாக மாற்றுகிறது. தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா முடிவுகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, 2026-ல் ஒன்பிளஸ் நோர்ட் 6-க்கு பதிலாக இது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக இருக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 விலை மற்றும் விற்பனை சலுகைகள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் (ஃபுல் ஸ்வைப்) ரூ.2,000 தள்ளுபடியையும், ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளில் (இஎம்ஐ பரிவர்த்தனைகள்) ரூ.3,000 தள்ளுபடியையும் பெறலாம். இதன் மூலம், 8ஜிபி மற்றும் 12ஜிபி வேரியண்ட்களின் விலை முறையே ரூ.35,999 மற்றும் ரூ.38,999 ஆக குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








