பொறுங்க.. நவ.20 வரை எந்த புது 5G போனும் வாங்கிடாதீங்க.. அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.. ஏன்னா?
முடிந்த வரை நவ.20 ஆம் தேதி வரையிலாக எந்த புதிய ஸ்மார்ட்போனும் வாங்கிவிட வேண்டாம். குறிப்பாக 5ஜி ஆதரவுடன் வரும் எந்த ஸ்மார்ட்போனையும் அவரசப்பட்டு வாங்கிவிட வேண்டாம். ஏனென்றால், ரெட்மி நிறுவனமானது "இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்" வருகிற நவ.20 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்பதை உறுதிசெய்துள்ளது. அதென்ன என்ன மாடல்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? அது ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போனாகும். கடந்த அக்டோபரில் நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் "ஒருவழியாக" நவ.20 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எக்ஸ் தளம் வழியாக ஷாவ்மீ இந்தியா பகிர்ந்துள்ள ஒரு போஸ்ட்டின்படி, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் அந்த பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நேரலைக்கு வந்துள்ளது. ஆகையால் இது இந்திய அறிமுகத்திற்கு பின்னர் அமேசான் இந்தியா மற்றும் சியோமி இந்தியா இணையதளம் வழியாக வாங்கு கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 4s Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் வழியாக கிடைத்த விவரங்களின்படி, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.88 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உடன் வரும் என்பதை ஷாவ்மீ உறுதிப்படுத்தியுள்ளது.
முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற வாய்ப்புள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் சர்குலர் ரியர் கேமரா யூனிட் ஆனது பேக் பேனலின் மேல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல்-டோன் ஃபினிஷுடன் (Dual Finish Tone) வரும் என்பது போல் தோன்றுகிறது. ஷாவ்மீ நிறுவனம் இதை "சாண்ட்விச் டிசைன்" (Sandwich Design) என்று மார்க்கெட்டிங் செய்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பாஸ்ட் சார்ஜ் செய்வதற்கான ஆதரவுடன் 5160mAh பேட்டரியை பேக் செய்யும். முன்னதாக வெளியான லீக் தகவல்கள் இது 18W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று பரிந்துரைகின்றன. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 1.0 ஸ்கின் (HyperOs 1.0 Skin) உடன் அனுப்பப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் இடம்பெறலாம்.
என்ன விலை? ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 க்குள் தான் இருக்கும் என்பதை ஷாவ்மீ நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. ஆனால் ஆரம்பகால விற்பனை விலை இன்னும் குறைவாக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்.. அறிமுக சலுகை, வங்கி சலுகைகள் உட்பட.. வெறும் ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications








