ரூ. 1,299 விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான போன் இது தான்.. ஆனாலும் ஜியோவுக்கு ஈடாகாது.. ஏன் தெரியுமா?

|

கடந்த வாரம், ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்ட் நிறுவனமான டிஸோ (Dizo) ஒரு ஜோடி TWS இயர்பட்ஸ் சாதனம் உள்ளிட்ட பல புதிய தயாரிப்புகளை அறிவித்தது. அதனை தொடர்ந்து இப்போது, ​​நிறுவனம் இரண்டு புதிய பியூச்சர் போன் தொலைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. யாரும் எதிர்பார்த்திடாத மலிவு விலையில் டிஸோ ஸ்டார் 300 மற்றும் டிஸோ ஸ்டார் 500 என்ற இரண்டு சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய டிஸோ ஸ்டார் 300 மற்றும் டிஸோ ஸ்டார் 500 பியூச்சர் போன்

புதிய டிஸோ ஸ்டார் 300 மற்றும் டிஸோ ஸ்டார் 500 பியூச்சர் போன்

இந்த புதிய டிஸோ ஸ்டார் 300 மற்றும் டிஸோ ஸ்டார் 500 ஆகிய இரண்டு தொலைப்பேசிகளும் T9 விசைப்பலகையுடன் இந்திய மொழிகளுக்கான ஆதரவு மற்றும் ஒரு டார்ச்சு லைட் உடன் வருகின்றது. விலை பற்றி பேசுகையில், டிஸோ ஸ்டார் 300 சாதனம் வெறும் ரூ. 1,299 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டிஸோ ஸ்டார் 500 சாதனம் ரூ. 1,799 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை எப்போது? எங்கே வாங்க கிடைக்கும்?

விற்பனை எப்போது? எங்கே வாங்க கிடைக்கும்?

இந்த டிஸோ ஸ்டார் 300 மற்றும் டிஸோ ஸ்டார் 500 ஆகிய இரண்டு பியூச்சர் போன் சாதனங்கள் ஈ-காமர்ஸ் போர்ட்டலான பிளிப்கார்ட்டில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த சாதனங்களுக்கான விற்பனை எப்போது அறிமுகமாகும் என்பதை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதனால் மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!

டிஸோ ஸ்டார் 500 சிறப்பம்சம்

டிஸோ ஸ்டார் 500 சிறப்பம்சம்

இந்த பியூச்சர் போன் 2.8' இன்ச் கொண்ட டச் அல்லாத வண்ண டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒரு தொகுதி போன்ற வடிவமைப்பு மற்றும் ஒரு செவ்வக உடலுடன் பக்கங்களிலும் வளைந்த விளிம்புகளுடன் வெளிப்படுகிறது. இது பின்புறத்தில் விஜிஏ 0.3 எம்பி கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ் லைட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் 32MB ரேம் மற்றும் 32MB ஸ்டோரேஜ் இடத்துடன் வருகிறது. இதில் கூடுதல் சேமிப்பிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மொழி ஆதரவுடன் 1900 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

டிஸோ ஸ்டார் 300 சிறப்பம்சம்

டிஸோ ஸ்டார் 300 சிறப்பம்சம்

இந்த சாதனம் 1.77' இன்ச் கொண்ட டச் அல்லாத வண்ண டிஸ்பிளேவை கொண்டுள்ளது. வளைந்த மூலைகளுடன் கேண்டிபார் வடிவமைப்பில் இது உள்ளது. இதில் விஜிஏ 0.3 எம்பி கேமராவுடன் எல்இடி பிளாஷ் லைட் உடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்புடன் 32 எம்பி ரேம் மற்றும் 32 எம்பி சேமிப்பு இடத்துடன் வருகிறது. இது 2550 எம்ஏஎச் பேட்டரி உடன் புளூடூத், மியூசிக் பிளேயர், அலாரம் கிளாக், வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.! ஏன் தெரியுமா?ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.! ஏன் தெரியுமா?

 2 ஜி இணைப்பு ஆதரவு மட்டும் தான் இதில் உள்ளதா?

2 ஜி இணைப்பு ஆதரவு மட்டும் தான் இதில் உள்ளதா?

ஏன் இந்த டிஸோ ஸ்டார் 500 மற்றும் டிஸோ ஸ்டார் 300 தொலைபேசிகள் ஜியோபோனுக்கு நிகரானது இல்லை என்பதை பார்க்கலாம். இதில் முக்கியமான விஷயமே இந்த இரண்டு சாதனங்களும் 2 ஜி இணைப்பு ஆதரவுடன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பியூச்சர் போன் தொலைப்பேசி சந்தை 4G ஐ நோக்கி நகர்ந்து வருவதால், இந்த புதிய தொலைபேசிகள் ஏன் இந்த முக்கிய மாற்றத்தை நிறைவேற்றாமல் சென்றது என்பது இன்னும் புதிராக உள்ளது.

டிஸோ ஜியோபோனுக்கு நிகரானது இல்லையா?

டிஸோ ஜியோபோனுக்கு நிகரானது இல்லையா?

இந்த ஒரு முக்கியமான விஷயத்தை டிஸோ ஸ்டார் 500 மற்றும் டிஸோ ஸ்டார் 300 இழந்த காரணத்தினால் இது இந்தியாவின் மிகவும் மலிவு விலை சாதனமான ஜியோபோன் சாதனத்துடன் நேரடி போட்டியில் களமிறங்க முடியாமல் போனது. இதனால் ஜியோபோன்னுடன் ஒப்பிடும் போது ஜியோ ஒரு படி முன்னேறி நிற்கிறது. மேலும், இந்த தொலைபேசிகளின் பயனர்கள் ஜியோ தவிர வேறு எந்த நெட்வொர்க்கையும் பயன்படுத்தலாம் என்பது கவனிக்கத்தக்கது. காரணம் ஜியோ வெறும் 4 ஜி சேவையை மட்டும் இந்தியாவில் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Dizo Star 500 and Dizo Star 300 Launched In India at a Cheap Price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X