Home
Mobile

அடிச்சு கொளுத்தும் ஆர்டர்கள்! வெறும் ரூ.6199 முதல்.. 9 Redmi, Xiaomi போன்கள் மீது நினைச்சு பார்க்காத தள்ளுபடி!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசான் (Amazon) வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனைகளை போலவே ஷாவ்மீ வலைதளத்த்ல் தீபாவளி வித் எம்ஐ (Diwali With Mi) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது.

அறியாதோர்களுக்கு 'தீபாவளி வித் எம்ஐ' என்பது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி, ஷாவ்மீ இந்தியா வலைத்தளத்தில் மட்டுமே நடக்குமொரு சிறப்பு விற்பனையாகும். இந்த விற்பனையின் போது ஷாவ்மீ, ரெட்மி பிராண்டின் கீழ் கிடைக்கும் பல வகையான தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

9 Redmi, Xiaomi போன்கள் மீது நினைச்சு பார்க்காத தள்ளுபடி!

ஒருவேளை உங்களுடைய முழு கவனமும் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் ஆஃபர்கள் மீது மட்டுமே இருக்கிறது என்றால்.. இந்த 'தீபாவளி வித் எம்ஐ' விற்பனையில் நினைத்து கூட பார்க்க முடியாத தள்ளுபடிகளை பெற்றுள்ள இந்த 9 ரெட்மி மற்றும் ஷாவ்மீ ஸ்மார்ட்போன்களையும் நீங்கள் தவற விடவே கூடாது!

சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி ஏ2 (Redmi A2) தள்ளுபடிக்கு பிறகு ரூ.6,199 க்கு வாங்க கிடைக்கிறது. இதே விலைப்பிரிவில், அதாவ ரூ,6000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் இன்னொரு ஸ்மார்ட்போனாக ரெட்ம 12சி (Redmi 12C) உள்ளது. இது தள்ளுபடிகளுக்கு பிறகு ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.8000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை தேடுபவர்கள், தீபாவளி வித் எம்ஐ விற்பனையின் போது ரெட்மி 12 (Redmi 12) ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். இது தள்ளுபடிகளுக்கு பிறகு வெறும் ரூ.8,099 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ரெட்மி நோட் 12 (Redmi Note 12) ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் பேங்க் கேஷ்பேக்கிற்கு பிறகு ரூ.10,799 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் 5ஜி ஆதரவுடன் வரும் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 Pro 5G) மாடலை கருத்தில் கொள்ளலாம். ரெட்மியின் இந்த பிரபலமான மிட்-ரேன்ஞ் ஸ்மார்ட்போன் ரூ.3,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பேங்க் கேஷ்பேக்கிற்கு பிறகு ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,749 க்கு வாங்க கிடைக்கிறது. இதே சீரீஸின்கீழ் வாங்க கிடைக்கும் பிளஸ் வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 12 Pro Plus 5G) மாடலானது வங்கிச் சலுகைகள் மற்றும் ரூ.3,500 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்குப் பிறகு ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஷாவ்மீ பிராண்டிங்கின் கீழ் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 12 ப்ரோ 5ஜி (Xiaomi 12 Pro 5G) மாடலானது, எம்ஐ.காம் வலைத்தளத்தில் கையிருப்பில் (ஸ்டாக்) இருக்கும்வரை, பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேன்ஞ் கேஷ்பேக்கிற்கு பிறகு ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும்

இந்த பட்டியலில் கடைசியாக உள்ளது ஷாவ்மீ நிறுவனத்தின் பிரீமியம் / பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஷாவ்மீ 12 ப்ரோ (Xiaomi 13 Pro) மாடலாகும். இது ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் வங்கி சலுகைகளுக்கு பிறகு ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கும்.

மற்ற தயாரிப்புகள் மீது கிடைக்கும் முக்கியமான ஆஃபர்களை பொறுத்தவரை, ஷாவ்மீ பேட் 6 (Xiaomi Pad 6) டேப்லெட் மாடலானது சலுகைகளுக்கு பிறகு ரூ.20,749 க்கு வாங்க கிடைக்கிறது. நீங்கள் ஒரு நல்ல லேப்டாப்பை தேடுகிறீர்களானால், எம்ஐ நோட்புக் அல்ட்ரா (Mi Notebook Ultra) லேப்டாப்பை கருத்தில் கொள்ளலாம். இது வங்கி சலுகைகளுக்கு உட்பட்டு ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Diwali With Mi 2023 Sale Best Selling Redmi Xiaomi 4G and 5G Smartphones Gets Discounts Bank Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X