தீபாவளி பெயரை சொல்லி... 3 OnePlus போன்கள் மீது "அடேங்கப்பா" ஆபர்!

|

"தீபாவளி பண்டிகை காலத்தின் போது.. கண்டிப்பாக Diwali Sale என்கிற பெயரின் கீழ், பல நிறுவனங்களின் ஸ்மர்ட்போன்களின் மீது பல வகையான தள்ளுபடிகள், சலுகைகள் அறிவிக்கப்படும்..

..அந்த நேரத்தில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை பார்த்து வாங்கி விட வேண்டியது தான்!" என்கிற மைண்ட்-செட்டில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால்.. அதுவும் OnePlus மாடல்கள் மீதான ஆபர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள் என்றால்.. கவலையை விடுங்கள்!

சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் வலைத்தளங்கள் ஆனது, தத்தம் பண்டிகை கால சிறப்பு விற்பனைகளை, செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலைப்பாட்டில் இந்த இரண்டு இ-காமர்ஸ் நிறுவனங்களும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீது நம்ப முடியாத சலுகைகளை வழங்குகின்றன.

ஏமாத்து வேலை இல்ல! நிஜமாவே ரூ.15,099-க்கு கிடைக்கும் ரூ.74,999 Samsung போன்!ஏமாத்து வேலை இல்ல! நிஜமாவே ரூ.15,099-க்கு கிடைக்கும் ரூ.74,999 Samsung போன்!

அந்த பட்டியலில் OnePlus போன்களும் அடங்கும்!

அந்த பட்டியலில் OnePlus போன்களும் அடங்கும்!

இம்முறை, OnePlus நிறுவனமே அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், அதன் சொந்த தீபாவளி சிறப்பு விற்பனையை நடத்துகிறது.

ஒருவேளை உங்களுக்கு அமேசான் வழியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் திருப்தி இல்லை என்றால்.. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட்டை அணுகலாம்!

இந்த தீபாவளி சேலில் மிஸ் பண்ணவே கூடாத 3 ஒன்பிளஸ் மாடல்கள்!

இந்த தீபாவளி சேலில் மிஸ் பண்ணவே கூடாத 3 ஒன்பிளஸ் மாடல்கள்!

ஒன்பிளஸ் வலைதளத்தில், ஏற்கனவே தொடங்கி விட்ட (செப்டம்பர் 22 முதல்) இந்த தீபாவளி சிறப்பு விற்பனையானது வருகிற செப்டம்பர் 30 வரை நேரலையில் இருக்கும்!

இந்த விற்பனை காலத்தின் போது, பெரும்பாலான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மீது ஆபர்கள் கிடைக்கும் என்றாலும் கூட, குறிப்பிட்ட 3 மாடல்களின் மீது கிடைக்கும் சலுகைகள் நம்முடைய ஆர்வத்தை தூண்டும்படி உள்ளன!

அதென்ன மாடல்கள்? அவைகளின் மீது என்னென்ன ஆபர்கள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்!

மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!

01. ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro)

01. ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro)

இந்த தீபாவளி விற்பனையின் போது, ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் ஆனது ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படும். நினைவூட்டும் வண்ணம் இது ரூ.66,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதாவது OnePlus 10 Pro மீது "அதிகாரப்பூர்வமாக" ரூ.11,000 என்கிற தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது!

இதுவொரு Flat Offer அல்ல!

இதுவொரு Flat Offer அல்ல!

ஒன்பிளஸ் 10 ப்ரோ மீது அணுக கிடைக்கும் ரூ.11,000 என்கிற தள்ளுபடியானது ஒரு பிளாட் ஆபர் அல்ல
என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த சலுகை, நீங்கள் பயன்படுத்தும் பேங்க் கார்டுகளின் அடிப்படையில் இருக்கும். உடன் சில கூடுதல் தள்ளுபடியும் இருக்கும். சில பரிவர்த்தனை சலுகைகளும் இருக்கும்.

இதெல்லாம் சேர்ந்து தான், ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை பெரிய அளவில் குறைக்கும். இந்த மாடல் மீது ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் அணுக கிடைக்கும்!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

02. ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R)

02. ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R)

இந்தியாவில் ரூ.40,000 என்கிற விலை பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்ட OnePlus 10R ஆனது, இந்த தீபாவளி விற்பனையின் போது ரூ.30,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் OnePlus 10R-ஐ ரூ.29,999 க்கு வாங்க முடியும். நினைவூட்டும் வண்ணம், இதன் அசல் விலை ரூ.38,999 ஆகும்.

அதாவது இந்த தீபாவளி பண்டிகை கால விற்பனையின் ஒரு பகுதியாக ஒன்பிளஸ் 10ஆர் மீது ரூ.9,000 என்கிற தள்ளுபடி அணுக கிடைக்கும்.

03. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G)

03. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G)

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆன OnePlus Nord CE 2 Lite 5G மீதும் தீபாவளி சலுகைகள் அணுக கிடைக்கும்.

இதை நீங்கள் ரூ.17,499 க்கு வாங்கலாம். இதன் அசல் விற்பனை விலை ரூ.19,999 ஆகும். அதாவது உங்களுக்கு ரூ.2,500 என்கிற தள்ளுபடி அணுக கிடைக்கும். மேலும் இது பேங்க் கார்டுகள் வழியிலான ஒரு சலுகையாக இருக்கும்!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

வேறு என்னென்ன தயாரிப்புகளின் மீது ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது?

வேறு என்னென்ன தயாரிப்புகளின் மீது ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது?

ஸ்மார்ட்போன்களை தவிர்த்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள், இயர்பட்ஸ்கள் மீதும் தீபாவளி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் வலைத்தளம் வழியாக, லக்கி ட்ரா (Lucky Draw) மற்றும் பிளிப் அண்ட் வின் சேலன்ஞ் (Flip and Win Challenge) போன்ற போட்டிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Diwali Sale Offer 2022 These 3 OnePlus Smartphones Get Massive Discounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X