தீபாவளி ஆபர்னா.. இப்படி இருக்கனும்! தள்ளுபடியில் மிதக்கும் 2 Samsung போன்கள்!

|

வியாபாரம் ஆகாத மொக்கையான ஸ்மார்ட்போன்களின் மீது தீபாவளி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை (Mobile Offers) அறிவிக்கும் சில நிறுவனங்களின் மத்தியில்..

"தரமான" பிராண்டிங் பெயரை கொண்டுள்ள சாம்சங் (Samsung ) நிறுவனம் அதன் "வெயிட்டான" இரண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் மீது 41% வரையிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது!

அதென்ன ஸ்மார்ட்போன்கள்?

அதென்ன ஸ்மார்ட்போன்கள்?

நாம் இங்கே பேசுவது சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன்களான - கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 பற்றியே ஆகும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களின் மீதும் என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. அவைகள் எந்த வலைதளத்தின் வழியாக அணுக கிடைக்கிறது; வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!

41% ஆபர் மற்றும் 38% ஆபர்!

41% ஆபர் மற்றும் 38% ஆபர்!

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, நிகழும் Flipkart Big Diwali Sale-இன் கீழ் Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போன் மீது 41 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கிறது.

அதேசமயம், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் Galaxy Z Flip 3 ஆனது 38 சதவிகிதம் தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது.

Galaxy Z Flip 3-இன் தள்ளுபடி விலை:

Galaxy Z Flip 3-இன் தள்ளுபடி விலை:

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மாடல், இந்தியாவில் ரூ.77,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் வழியாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கோடக் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.5,000 என்கிற உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

கேலக்ஸி இசட் ஃபிளிப் 3-இன் முக்கிய அம்சங்கள்:

கேலக்ஸி இசட் ஃபிளிப் 3-இன் முக்கிய அம்சங்கள்:

கிரீம் மற்றும் பாண்டம் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டா-கோர் சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, IPX8 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங் உடன் வரும் முதல் "மடிக்கக்கூடிய" ஸ்மார்ட்போனும் இதுவாகும்!

Galaxy Z Fold 3-இன் தள்ளுபடி விலை:

Galaxy Z Fold 3-இன் தள்ளுபடி விலை:

சாம்சங் Galaxy Z Fold 3 மீதான தீபாவளி சலுகைகளை பொறுத்தவரை, நடந்துகொண்டிருக்கும் Amazon சிறப்பு விற்பனையின் போது, இது பெரும் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

இந்தியாவில் ரூ.1,42,999 என்கிற ஆரம்ப விலையில் வெளியிடப்பட்ட கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஆனது தற்போது ரூ.1,19,999 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆளுக்கு ஒரு 5G போன் பார்சல்! சரியான நேரத்தில்.. Samsung-ன் தரமான ப்ரைஸ் கட்!ஆளுக்கு ஒரு 5G போன் பார்சல்! சரியான நேரத்தில்.. Samsung-ன் தரமான ப்ரைஸ் கட்!

கூடுதல் சலுகையும் உண்டு!

கூடுதல் சலுகையும் உண்டு!

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.10,000 மதிப்புள்ள Amazon கூப்பனையும் நீங்கள் பெறலாம்.

கூடுதலாக, நீங்களொரு ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனராக இருந்தால் ரூ.4,000 என்கிற உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3-இன் முக்கிய அம்சங்கள்:

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3-இன் முக்கிய அம்சங்கள்:

கிரீன், பிளாக் மற்றும் சில்வர் என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டா-கோர் சிப்செட், S-Pen க்கான ஆதரவு, அண்டர் டிஸ்ப்ளே கேமரா, 7.6-இன்ச் இன்பினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது!

செவ்வாய் கிரகத்தில் செவ்வாய் கிரகத்தில் "சிக்கிய" விசித்திர பொருள்.. காற்றில் பறந்து வந்து மாட்டி கொண்டது!

வேறு என்னென்ன Samsung போன்கள் மீது ஆபர் கிடைக்கிறது!

வேறு என்னென்ன Samsung போன்கள் மீது ஆபர் கிடைக்கிறது!

நடந்துகொண்டிருக்கும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனையின் போது, ​கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ், கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி, கேலக்ஸி எம்32 ப்ரைம் எடிஷன் மற்றும் பலவற்றின் மீதும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது!

Best Mobiles in India

English summary
Diwali Mobile Offers 2022 Samsung Galaxy Z Fold 3 and Flip 3 Gets Heavy Discounts on Amazon Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X