யாருமே எதிர்பார்க்காத ஒரு லேட்டஸ்ட் Samsung போன் மீது ரூ.10,000 தள்ளுபடி!

|

தீபாவளி சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.10,000 என்கிற நம்பமுடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? ஆபர் விலைக்கு பின்பும் கூட, குறிப்பிட்ட Samsung ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? மேலதிக விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

எந்த மாடல் மீது ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது?

எந்த மாடல் மீது ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது?

நம்பினால் நம்புங்கள்! ​தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக Samsung Galaxy S22 5G மாடல் ஆனது சாம்சங் கேலக்ஸி S21 FE 5ஜி மாடலை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது!

ஆம்! ரூ.10,000 என்கிற தள்ளுபடியை பெறும் சாம்சங் மாடல் - கேலக்ஸி எஸ்22 5ஜி-யே ஆகும்.

ஆளுக்கு ஒரு 5G போன் பார்சல்! சரியான நேரத்தில்.. Samsung-ன் தரமான ப்ரைஸ் கட்!ஆளுக்கு ஒரு 5G போன் பார்சல்! சரியான நேரத்தில்.. Samsung-ன் தரமான ப்ரைஸ் கட்!

இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில்ம், அதாவது பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.72,999 ஆகும். ஆனால் தற்போது இது ரூ.50,000 க்கு கீழ் வாங்க கிடக்கிறது!

அதெப்படி?

அதெப்படி?

சாம்சங் கேலக்ஸி S22 5G ஆனது இப்போது ரூ.49,999 என்கிற நம்பமுடியாத விலைகு வாங்க கிடைக்கிறது.

மேற்குறிப்பிட்ட தள்ளுபடி விலையானது அமேசான் வலைதளம் வழியாக அணுக கிடைக்கும் ரூ.10,000 மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்திய பிறகு அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்கள் அறிவிப்பு: என்ன விலை? எங்கெல்லாம் கிடைக்கும்?ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்கள் அறிவிப்பு: என்ன விலை? எங்கெல்லாம் கிடைக்கும்?

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே!

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே!

ஃபாண்டம் பிளாக், ஃபாண்டம் ஒயிட் மற்றும் ஃபாண்டம் க்ரீன் என்கிற 3 வண்ணங்களின் கீழ் வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 மீது கிடைக்கும் இந்த தள்ளுபடி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும் மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

எனவே, எஸ்22 மாடலை மேற்கூறிய தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும்!

ரூ.49,999 க்கு இது வொர்த் ஆன ஸ்மார்ட்போனா?

ரூ.49,999 க்கு இது வொர்த் ஆன ஸ்மார்ட்போனா?

Galaxy S22 5G மாடல் ஆனது - சாம்சங்கின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ஒரு சில காரணங்களை மட்டும் அல்ல, எக்கச்சக்கமான காரணங்களை முன்வைக்கலாம்!

ஏனெனில், இது அலுமினியம் ஃப்ரேம் மற்றும் கிளாஸ் பேக்கை வழங்கும் பிரீமியம் "கட்டமைப்பை" வழங்குகிறது.

மேலும் இது 6.1-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை பேக் செய்கிறது. கூடுதலாக, முன் பக்கமும், பின் பக்கமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பையும் கொண்டுள்ளது!

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

என்ன ப்ராசஸர்.. எவ்வளவு ஸ்டோரேஜ்..  என்ன கேமரா?

என்ன ப்ராசஸர்.. எவ்வளவு ஸ்டோரேஜ்.. என்ன கேமரா?

இது Qualcomm Snapdragon 8 Gen 1 SoC-ஐ பேக் பேக் செய்கிறது. அறியாதோர்களுக்கு இது ஒரு 5ஜி சிப்செட் ஆகும். இது 8GB ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 50MP மெயின் லென்ஸ் + 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடனான 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது. முன்பக்கத்தில், 10எம்பி செல்பீ கேமரா உள்ளது.

என்ன பேட்டரி?

என்ன பேட்டரி?

இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 3,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை 6, ப்ளூடூத் 5.2 மற்றும் GPS ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது; விரைவில் இது ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டையும் பெறும்.

Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் மொத்த 5G போன்களும் இதோ!Samsung முதல் Lava வரை.. ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் மொத்த 5G போன்களும் இதோ!

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

ரூ.49,999 என்கிற சலுகை விலையில் கிடைக்கும் வரை, Galaxy S22 5G ஸ்மார்ட்போன் ஆனது மிஸ் பண்ணவே கூடாத ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஏனெனில் இது Android 13 OS-ஐ பெறும் மற்றும் செயல்திறனில் ஒரு குறையும் சொல்லாத ஃபிளாக்ஷிப் சிப்பைக் கொண்டுள்ளது, மேலும் இதன் கேமராக்களை பயன்படுத்தி, நீங்கள் 8K வீடியோக்களையும் கூட பதிவு செய்யலாம்!

Best Mobiles in India

English summary
Diwali Mobile Offer Samsung 2022 Flagship Smartphone Galaxy S22 5G Gets Rs 10000 Discount on Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X