ரூ.8000 இல்ல இப்போ ரூ.5000 பட்ஜெட்ல.. வீட்டுல யாருக்கெல்லாம் புது போன் வேணும்.. வரிசையா நில்லுங்க!
என்னதான் ரெட்மி, சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இருந்து பல வகையான என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும் கூட.. அவைகள் இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவாவின் மாடல்களுக்கு இணையாக இருப்பதில்லை. லாவாவின் ஸ்மார்ட்போன்கள், முதல் முறையாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல இருக்கும்!
அப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன், இப்போது ரூ.8000 பட்ஜெட்டில் இருந்து இறங்கி வந்து ரூ.5000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. அது லாவா ஓ3 ப்ரோ (Lava O3 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். இஇதுவொரு ஆபர் விலையாகும் மற்றும் இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025-ன் ஒரு பகுதியாக கிடைக்கிறது.

அமேசானில் தற்போது, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது எம்ஆர்பி விலையான ரூ.7,799 க்கு பதிலாக ரூ.5,749 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது 26% நேரடி தள்ளுபடியை (ரூ.2050 விலை குறைப்பை) பெற்றுள்ளது.
லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 X 720 பிக்சல்ஸ் ரெசல்யூசன் மற்றும் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது யுனிசாக் டி606 ஆக்டாகோர் அப்செட் (Unisoc T606 octa-core chipset) மூலம் இயக்கப்படுகிறது. லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட் ஆனது அன்டுடு (AnTuTu) பெஞ்ச்மார்க்கில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான பாயிண்ட்களை பெற்றுள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை இந்த சிப்செட் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த மல்டி டாஸ்கிங்கிற்காக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளது; ஆகமொத்தம் 8ஜிபி ரேம் கிடைக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்புறத்தில் உள்ள 8 எம்பி கேமரா பார்த்துக்கொள்ளும்.
பேட்டரியை பொறுத்தவரை இது 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஃபேஸ் அன்லாக் ஆதரவை கொண்டுள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
அமேசானின் 2025 தீபாவளி விற்பனையில் வேறு என்னென்ன லாவா ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது? லாவா போல்ட் என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி ஆன ரூ.8,339 க்கு பதிலாக 21% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.6,599 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் லாவாவின் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் லாவா ஸ்ட்ராம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) மாடலை கருத்தில் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி ஆன ரூ.13,499 க்கு பதிலாக 26% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதைவிட இன்னும் அதிக அம்சங்கள் நிறைந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், நீங்கள் லாவ் அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) ஸ்மார்ட்போனை பார்க்கலாம். அமேசானில் தற்போது - இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி ஆன ரூ.27,999 க்கு பதிலாக 25% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








