ரூ.20K பட்ஜெட் விலைக்குள் வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ74 5ஜி.!

|

ஒப்போ நிறுவனம் எப்போதுமே புரட்சிகர தயாரிப்புகளை அறிமுகம் செய்து பிரமிக்க வைக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் ஸ்டைலான வடிவமைப்புக்களில் மிகவும் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது ஒப்போ நிறுவனம். ஒப்போ நிறுவனம் தொடர்ந்து பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. பல ஸ்மார்ட் சாதனங்களை உருவாக்கி பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம். குறிப்பாக நுகர்வோரின் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய நல்ல தரமான சாதனங்களை கொண்டுவருகிறது ஒப்போ நிறுவனம். ஒப்போ நிறுவனத்தை பொறுத்தவரை 2021-ம் ஆண்டு ரெனோ மற்றும் எஃப் சீரிஸ் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவருவதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் வேகமான இணைய வேகத்தை வழங்கும் என்பதால் அதிக வரவேற்பை பெறும். தற்சமயம் ஒப்போ நிறுவனம் தனது 5ஜி தொழில்நுட்பத்தை ஏ சீரிஸ் வரிசையில் விரிவுபடுத்தியுள்ளது. விரைவில் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்பதால் ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

பட்ஜெட் விலைக்குள் வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ74 5ஜி.!

ஒப்போ ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்போதுமே பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி இந்நிறுவனம் 5ஜி தொழில்நுட்ப வசதி உடன் ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த சாதனம் ரூ.20K பட்ஜெட் விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி வசதி இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை, ஆனாலும் 5ஜி சேவை விரைவில் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இதை மையமாக வைத்து ஒப்போ நிறுவனம்இப்போதே ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வசதியை கொண்டு இந்த ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் கலர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி சாதனம் . பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ரூ.17,900-விலையில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனம் பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 5ஜி உடன் சிறப்பான சிப்செட் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இப்போது ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலைக்குள் வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ74 5ஜி.!

தரமான டிஸ்பிளே வசதி

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஹைப்பர்-கலர் ஸ்கிரீன் ஆனது படங்கள் மற்றும் வீடியோக்களில் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளால் டிஸ்பிளேவை வேகமாக இயக்க முடியம். இணையம், கேமிங் உள்ளிட்ட அம்சங்களுக்கும் மிகவும் அருமையாக பயன்படும் இந்த புதிய சாதனம். பின்பு ரூ.20K பட்ஜெட் விலைக்குள் சிறந்த டிஸ்பிளே வசதியை வழங்கியுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனம். மேலும் இந்த சாதனம் 2400x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் எப்எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளதால் திரைப்படங்கள் மற்றும் கேமிங் போன்றவற்றிக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். அதேபோல் சிறந்த பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். இந்த ஸ்மார்ட்போனில் மிருதுவான வண்ணங்கள் மற்றும் அதிக மாறுபட்ட நிலைகள் இருப்பதால் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்றவற்றை மிகவும் தெளிவாக பார்க்க முடிகிறது. குறிப்பாக சிறந்த டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

கேமர்களுக்கு தகுந்த ஸ்மார்ட்போன் தான் ஒப்போ ஏ74 5ஜி. அதாவது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதியுடன இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வேகமாக இந்த ஸ்மார்ட்போனை இயக்க முடியம். பின்பு அனைத்து வகையான கேம்களுக்கு பயன்படும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது வரும் புதிய புதிய கேம்களை கூட இந்த ஸ்மார்ட்போனில் எளிமையாக பதிவிறக்கம் செய்து வேகமாக விளையாட முடியும்.

ஒப்போ நிறுவனம் எப்போதுமே கண்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய டிஸ்பிளேக்களை உருவாக்க அதிக முயற்சி செய்கிறது. மேலும் இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தின் டிஸ்பிளே வசதியும் பாதுகாப்பான அம்சங்களை வழங்குகிறது. அதாவது இந்த சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஏஐ (AI) பேக்லைட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த வசதி சிறந்த பாதுகாப்பு நிறைந்தது என்றுதான் கூறவேணடும். வீடியோக்கள் பார்க்கும் போதும், கேமிங் அதாவது இந்த ஸ்மார்ட்போனில் விளையாடும்போதும் கண்களுக்கு சிரமம் கொடுப்பதை தடுகிறது இந்த பேக்லைட் வசதி. குறிப்பாக இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ஏ74 5ஜி சாதனம் ஆனது பொழுதுபோக்கு வசதிக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இது கேமிங் அல்லது வீடியோ பிளேபேக் வசதிக்கு தகுந்தபடி மல்டி-கூலிங் சிஸ்டம் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த மல்டி-கூலிங் சிஸ்டம் ஆனது ஸ்மார்ட்போன் வெப்பம் ஆவதை தடுக்கிறது என்றே கூறலாம். எனவே இந்த வசதி மூலம் நீண்ட நேரம் வீடியோ பிளேபேக் மற்றும் கேமிங் போன்றவற்றை பயன்படுத்த முடியும். கூடுதலாக Dirac 2.0 சிங்கிள் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் ஆடியோ வசதி தனி அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

பட்ஜெட் விலைக்குள் வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ74 5ஜி.!

சிறந்த பேட்டரி மற்றும் சார்ஜிங் அனுபவம்

எந்தவொரு பட்ஜெட் சாதனத்தின் முக்கிய அம்சம் என்பது பேட்டரி மற்றும் சார்ஜ் வசதி தான். அதன்படி இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதாவது 60 நிமிடங்களில் 68 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு நீங்கள் வீடியோ அழைப்புகள், ஆன்லைன் கேமிங், வீடியோ பிளேபேக் மற்றும் மொபைலில் எந்தவொரு வேலை செய்தாலும் பேட்டரியை இழக்க நேரிடும் என்ற கவலையின்றி உங்கள் அன்றாட பணியை நீங்கள் செய்ய முடியும். அதாவது சிறந்த பேட்டரி பேக்கப் கொடுகிறது இந்த சாதனம். அதிக நேரம் கவலை இன்றி பயன்படுத்த முடியும். இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனம் ஆனது 8.69 மணிநேர வீடியோ சாட், 7.86 மணிநேர ஆன்லைன் கேம் விளையாட உதவியாக இருக்கிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் விரைவாக சார்ஜ் செய்து அதிக நேரம் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். பட்ஜெட் விலையில் இதுபோன்ற சார்ஜிங் அம்சம் மற்றும் பேட்டரி வசதி அமைவது கடினம் என்றே கூறலாம்.

இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தில் அவ்வளவு சீக்கிரம் சார்ஜ் இறங்கிவிடாது. மேலும் இந்த சாதனத்தில் உள்ள பேட்டரியை சேமிக்க பல்வேறு சிறப்பு அம்சங்களும் உள்ளன. அதாவது ஸ்மார்ட் பவர் சேமிப்பு வசதி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனம். இந்த ஸ்மார்ட் பவர் சேமிப்பு வசதி இருப்பதால் கவலை இன்றி அதிகநேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். இந்த அம்சத்தின் மூலம் ஒப்போ ஏ74 5ஜி தானாகவே CPU அதிர்வெண்ணை சரிசெய்யும் மற்றும் அதிக ஆற்றலை உட்கொள்வதிலிருந்து பயன்பாடுகளை நிர்வகிக்கும். அதாவது ஆப் வசதிகளை பேட்டரிக்கு தகுந்தபடி நிர்வகிக்கும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்மார்ட் பவர் சேமிப்பு முறை.

கூடுதலாக Super Nighttime Standby வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது குறிப்பிட்ட நேரங்களில் 2 சதவீத பேட்டரியை மட்டுமே பயன்படுத்துகிறது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன். எளிமையாகச் சொன்னால் பேட்டரியை மிச்சப்படுத்த பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸமார்ட்போன். எனவே இந்த சாதனத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

பட்ஜெட் விலைக்குள் வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ74 5ஜி.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதிகளில் பல்வேறு புதிய முறைகளை கொண்டு வந்துள்ளது ஒப்போ நிறுவனம். அதாவது Battery Guard அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனம். இது உங்கள் ஸ்மார்ட்போனை இரவு நேரங்களில் அதிகமாக சார்ஜ் ஆவதை தடுக்கிறது. ஏஐ எனப்படும் தொழில்நுட்ப வசதியுடன் இந்த புதிய அம்சம் செயல்படுகிறது. குறிப்பாக சாதனம் சார்ஜ் செய்வதைத் தனிப்பயனாக்குகிறது, இதனால் இரவு சார்ஜிங் சுழற்சிகளில் பேட்டரி பாதுகாக்கப்படும். இந்த அம்சத்தின் மூலம் ஸ்மார்ட்போனின் பேட்டரியை அதிக நாட்கள் பயன்படுத்த முடியும். அதேசமயம் இரவில் இந்த சாதனத்தை பாதுகாப்பாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்த சாதனத்தில் கிடைக்கும் நடைமுறை அம்சங்கள் எனக்கு ஒரு சூப்பர் அனுபவத்தை அளித்தன, குறிப்பாக பேட்டரி மற்றும் சார்ஜ் ஆதரவு. பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதிக்கு என்றே பல பயனர்கள் ஒப்போ ஏ74 5ஜி சாதனத்தை தேர்வுசெய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும் கேமராக்கள்

ஒப்போ நிறுவனம் எப்போதுமே மேம்பட்ட கேமராக்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. அதாவது ஒப்போ ஏ74 5ஜி சாதனம் ஆனது 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. கூடுதலாக, உங்கள் அனைத்து செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பு தேவைகளுக்காக பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேயில் 8எம்பி கேமரா வைக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்கள் AI Scene Enhancement 2.0 மற்றும் AI Beautification 2.0 போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன. இது உங்களுக்கு மிகத் தெளிவான 108எம்பி படங்களை வழங்குகிறது. நீங்கள் இயற்கைக்காட்சி அல்லது ஒரு உருவப்படத்தை கிளிக் செய்தாலும், கேமராக்கள் உங்களுக்கு தெளிவான படங்களை தருகின்றன. குறிப்பாக ஒப்போ ஏ4 5ஜி பிரதான கேமரா 108எம்பி செயற்கை இமேஜிங்கை ஆதரிக்கிறது, இது உங்களுக்கு சரியான படத்தை வழங்குகிறது.

பட்ஜெட் விலைக்குள் வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ74 5ஜி.!

5ஜி வசதி மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன்

5ஜி நெட்வொர்க்கிற்கு மாறும்போது இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும் என்றே கூறலாம். அதாவது 5ஜி ஆதரவுடன் ஒப்போ ஏ74 சாதனம் வெளிவந்துள்ளதால் பின்வரும் காலங்களில் கூட இணையத்தை வேகமாக பயன்படுத்த முடியும். குறிப்பாக குவால்காம்

ஸ்னாப்டிராகன் டிஎம்480 5ஜி சிப்செட்டால் இயக்கப்படுகிறது இந்த ஒப்போ ஏ74 5ஜி சாதனம். எதிர்காலத்தில் வேகமான 5ஜி வசதியை உறுதி செய்கிறது இந்த புத்தம் புதிய சாதனம். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை வழங்குகிறது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இப்போது சிறந்த 4ஜி வேகத்தை தரும்படி பயன்படுகிறது. இந்த சாதனத்தின் செயல்திறனின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அட்ரினோ 619 உடன் வருகிறது. இது நீண்ட கால வேகம், வேகமான கிராபிக்ஸ் ரெண்டரிங் மற்றும் தடையற்ற ஆப் பயன்பாட்டு செயல்திறன் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குகிறது. பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ74 5ஜி: ஸ்டைலான மற்றும் பாதுகாப்பான ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் நேர்த்தியான, ஸ்டைலான உருவாக்கம் பின்புற பேனலில் உள்ள வண்ணங்களால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். கருப்பு மற்றும் அருமையான ஊதா வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கூடுதலாக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஒட்டுமொத்த வடிவமைப்பின் விவரங்களை மேம்படுத்துகிறது. மிகப்பெரிய பேட்டரி இருந்தபோதிலும், ஸ்மார்ட்போனின் எடை 188 கிராம் மட்டுமே மற்றும் 8.42 மிமீ தடிமன் கொண்டது. அனைத்து இடங்களுக்கு மிக அருமையாக எடுத்தும் சென்று பயன்படுத்தும் வகையில் இருக்கிறது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.

சமீபத்திய கலர்ஒஎஸ் 11.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலைக்குள் வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ74 5ஜி.!

ஒப்போ ஏ74 5ஜி: ஆல்-ரவுண்டர், எதிர்கால அட்டகாசமான ஸ்மார்ட்போன்

பல்வேறு விலை பிரிவுகளில் 5ஜி ரெடி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஒப்போ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் பாராட்டத்தக்கது என்று தான் கூறவேண்டும். சுவாரஸ்யமானது என்னவென்றால், ஒப்போ ஏ74 5ஜி சாதனம் சிறந்த டிஸ்பிளே, பேட்டரி மற்றும் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் உங்கள் பாக்கெட்டில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வைப்பதை உறுதி செய்கிறது ஒப்போ நிறுவனம். ஸ்டைலான, பிரீமியம் வடிவமைப்போடு, சிறந்த செயல்திறனை நீங்கள் ஆராய விரும்பினால், காத்திருப்பு முடிவுக்கு வருவதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அதாவது ஒப்போ ஏ74 5ஜி சாதனம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி அமேசான் மற்றம் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிகரமான ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சலுகைகளுடன் கிடைக்கும்

அமேசான் வழியாக ஆன்லைன் சலுகைகள்

ஒப்போ ஏ74 5ஜி அமேசானில் கிடைக்கிறது. பயனர்கள் இந்த சாதனத்து குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்ட், கிரெடிட் கார்ட் இஎம்ஐ பரிவர்த்தனை மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் வாங்கும் போது உடனடி 10% தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் 9 மாதம் நோ காஸ்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகளிலும் இந்த சாதனம் கிடைக்கிறது.

ஒப்போ ஏ74 5ஜி சானத்துக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. பயனர்கள் ஒப்போ ஏ74 5ஜி வாங்கும்போது ஒப்போ என்கோ டபிள்யூ11 சாதனத்தை குறைந்த விலையில் அதாவது ரூ.1,299-க்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி ஒப்போ ஏ74 5ஜி சாதனம் வாங்கும்போது ஒப்போ பேண்ட் ரூ.2499 எனவும் ஒப்போ டபிள்யூ31 ரூ.2499-க்கு கிடைக்கும். ஒப்போ ஏ4 5ஜி சாதனத்திற்கு 2 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2 வருட கூடுதல் சலுகைகளைும் ஒப்போ ஏ74 5ஜி-க்கு வழங்கப்படுகிறது.

ஆஃப்லைன் சலுகைகள்

அதேபோல் ஆஃப்லைன் பயனர்களுக்கும் ஏணைய சலுகைகள் இருக்கிறது. பயனர்கள் ஆஃப்லைன் கடைகளில் இந்த சாதனம் வாங்கும் போது எச்டிஎஃப்சி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் வங்கி மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் 5% கேஷ்பேக் கிடைக்கிறது. மேலும் பேடிஎம் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது 11% கேஷ்பேக் கிடைக்கிறது. முன்னணி ஃபைனான்ஸ்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பூஜ்ஜிய கட்டண செலுத்துதல் மட்டுமின்றி 6 மாதம் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்திலும் வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Disrupting The Under 20K Segment, The OPPO A74 5G Is The 5G All-Rounder We Have All Been Waiting For: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X